5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Haryana Election Result 2024 LIVE: பாஜக முன்னிலை.. ஹரியானாவில் காங்கிரஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Haryana Assembly Election Results 2024 LIVE Counting and Updates: ஹரியான சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தனித்து களம் கண்டன. அதேசமயம் மத்தியில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை தனித்தனியே போட்டியிட்டது. மேலும் ஜனநாயக ஜனதா கட்சி, ஆசாத் சமாஜ் கட்சி ஒரு கூட்டணியாகவும்,   இந்திய தேசிய லோக் தாள், பகுஜன் சமாஜ் ஆகியோர் ஒரு கூட்டணியாகவும் கைகோர்த்து இந்த தேர்தலை எதிர்கொண்டன.

Haryana Election Result 2024 LIVE: பாஜக முன்னிலை.. ஹரியானாவில் காங்கிரஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 08 Oct 2024 20:24 PM

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெறும் மாநில சட்டமன்ற தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெறும். அந்த வகையில் 90 இடங்களை கொண்ட ஹரியானா சட்டமன்றத்திற்கு கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தனித்து களம் கண்டன. அதேசமயம் மத்தியில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை தனித்தனியே போட்டியிட்டது. மேலும் ஜனநாயக ஜனதா கட்சி, ஆசாத் சமாஜ் கட்சி ஒரு கூட்டணியாகவும்,   இந்திய தேசிய லோக் தாள், பகுஜன் சமாஜ் ஆகியோர் ஒரு கூட்டணியாகவும் கைகோர்த்து இந்த தேர்தலை எதிர்கொண்டன. ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ள நிலையில் அக்கட்சியின் மீது அரியானா மக்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காமல் இருப்பது போன்றவை பாஜக மீது எதிர்மறையான எண்ணங்களை மக்களுக்கு ஏற்படுத்தி இருப்பதாக தேர்தல் கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. இந்த அதிருப்தியைப் பயன்படுத்தி ஹரியானாவில் ஆட்சிக்கு வர காங்கிரஸ் தேர்தல் வியூகம் வகுத்திருந்தது. அதனை முறியடிக்கும் வகையில் பாஜக செயல்பட்ட நிலையில் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Latest News