5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Haryana Election Result: ஹரியானாவில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன? இந்த 4 விஷயம் ரொம்ப முக்கியம்!

ஹரியானா தேர்தல் முடிவுகள்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஹரியானாவில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் இருந்தது. கருத்துக்கணிப்புகளிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்பட்டது. இதனால் காங்கிரஸ் அதிகப்படியான நம்பிக்கையில் இருந்தது. ஆனால் இன்றைய நிலவரம் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லாம்.

Haryana Election Result: ஹரியானாவில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன? இந்த 4 விஷயம் ரொம்ப முக்கியம்!
பிரதமர் மோடி – ராகுல் காந்தி (image credit: pti)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 Oct 2024 15:12 PM

ஹரியானாவில் ஒரே கட்டமாக கடந்த 5ஆம் தேதி சட்டப்பேரவை நடந்தது. 90 தொகுதிகள் கொண்ட ஹரியானாவில் பாஜக 89 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 89 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் போட்டியிட்டனர். ஜனநாயக ஜனதாக கட்சி 66 இடங்களிலும், ஆசாத் சமாஜ் கட்சி 12 இடங்களிலும் போட்டியிட்டனர். மேலும், ஆம் ஆத்மி 88 இடங்களிலும் போட்டியிட்டனர். 90 தொகுதிகளில் 464 சுயேச்சைகள் மற்றும் 101 பெண்கள் உட்பட மொத்தம் 1,031 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை 46 இடங்கள் தேவைப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக 51 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

ஹரியானாவில் காங்கிரஸுக்கு அதிர்ச்சி:

காங்கிரஸ் 37 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கிட்டதட்ட பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.  ஆனால் ஹரியானாவில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் இருந்தது.

கருத்துக்கணிப்புகளிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்பட்டது. இதனால் காங்கிரஸ் அதிகப்படியான நம்பிக்கையில் இருந்தது. இன்று வாக்கு எண்ணிக்கையில் காலையில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ், தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது.

Also Read: ஹரியானா தேர்தல்.. ஒருவழியாக வெற்றி… அரசியலில் சாதித்த வினேஷ் போகத்!

இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லாம். ஏனென்றால் ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சி தலைவர் நிச்சயம் வெல்வோம் என்ற மனநிலையில் இருந்தனர். ஆனால், அதையெல்லாம் பாஜக தவிடுபொடியாக்கி உள்ளது.  காங்கிரஸ் தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதற்கு முக்கியமாக நான்கு காரணங்கள் உள்ளன.

என்னென்ன காரணங்கள்:

ஹரியானாவில் ஜாட்கள் கணிசமான வாக்குப் பிரிவாக உள்ளனர். அதாவது, ஜாட் மற்றும் தலித் வாக்குகள் கணிசமாக உள்ளது. இதனையே காங்கிரஸ் நம்பி இருந்தது. எந்த அளவுக்கு ஜாட் ஓட்டு முக்கியம் என்றால், ஹரியானாவில் உள்ள 90 சீட்களில் 40 சீட்களில் ஜாக் சமூகத்தினரின் வாக்குகள் அடங்கியுள்ளது.

1996ஆம் ஆண்டு பஞ்சாபில் இருந்து ஹரியானா பிரிக்கப்பட்டதில் இருந்து, ஜாட் சமூகத்தைச் சேர்ந்த முதல்வர்கள் 33 ஆண்டுகளாக மாநிலத்தை ஆட்சி செய்துள்ளனர். ஹரியானாவின் முதல் மற்றும் இரண்டாவது முதல்வர்கள், பகவத் தயாள் சர்மா மற்றும் ராவ் பிரேந்தர் சிங் ஆகியோர் ஜாட் அல்லாதவர்கள் என்றாலும், நீண்ட காலமாக ஆட்சி செய்துள்ளனர்.

2014ஆம் ஆண்டு ஹரியானாவில் ஜாட் சமூகத்தை சேர்ந்த காங்கிரஸின் பூபிந்தர் சிங் ஹூடாவை தோற்கடித்து ஆட்சிக்கு வந்தது பாஜக. அப்போது முதல்வராக காத்ரி என்ற சமூகத்தை சேர்ந்த மனோகர் லால் கட்டாரை முதல்வராக அமர்த்தியது பாஜக. அதன்பிறகு 2019ல் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாததை அடுத்து, ஜனநாயக் ஜனதா கட்சியைச் சேர்ந்த துஷ்யந்த் சவுதாலா முதல்வராக அமர்த்தியது பாஜக.

ஜாட் வாக்குகள் யாருக்கு போனது?

இவர் ஒரு ஜாக் சமூகத்தை சேர்ந்தவர். இதற்கிடையில், பாஜக மீது ஜாட் சமூகத்தினர் பல காரணங்களுக்காக கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை காங்கிரஸ் தனக்கு சாதமாக செயல்படுத்த விரும்பியது. எப்படியென்றால், பாஜக கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக பேராட்டியவர்களில் பெரும்பாலானோர் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே அவர்களின் வாக்கு தங்களுக்கு வரும் என காங்கிரஸ் நினைத்தது.

மேலும், மல்யுத்த வீராங்கனை போராட்டத்தில் சாட் சமூகத்தைச் சேர்ந்த வினேஷ் போகட் மற்றும் சாக்ஷி மாலிக் ஈடுபட்டடனர். இதனாலும் ஜாட் சமூக வாக்குகள் வரும் என காங்கிரஸ் நம்பிக்கை வைத்தது. இதனாலேயே காங்கிரஸ் 28 தொகுதிகளில் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், இவர்களின் வாக்கும் பெரிதாக வரவில்லை என்று கூறப்படுகிறது. என்னதான் பாஜக மீது கோபம் இருந்தாலும், அந்த எதிர்ப்பு வாக்குகள் கூட காங்கிரஸால் பெற முடியவில்லை என்பதே உண்மை. இதுவே பாஜக வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.

உட்கட்சி மோதல்:

இதுமட்டுமில்லால் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பிரச்னை இருந்ததாக தெரிகிறது.  காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் மூத்த தலைவர் குமாரி செல்ஜா ஆகியோருக்கு இடையேயான அதிகார மோதல் ஏற்பட்டது. அதாவது, முதல்வர் வேட்பாளர் பதவிக்கு ஏற்பட்ட பிரச்னையும் காங்கிரஸ் தோல்வி அடைய காரணமாக இருக்கிறது.

Also Read: காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்.. 2 இடங்களில் உமர் அப்துல்லா முன்னிலை!

மேலும், அதிகபட்டியான பிராந்திய கட்சிகளும், சுயேட்சைகளும் போட்டியிட்டதால் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை பறித்து விட்டது. குறிப்பாக நகர்ப்புறங்களில் பாஜகவுக்கு அதிகப்படியான வாக்குகள் குவிந்தன. அதேவேலையில், கிராமப்புறங்களில் காங்கிரஸ் பெரும் வாரியான வாக்குகள் பெற்றிருந்தாலும், நகரப்புறங்களில் பாஜக அதிகப்படிசயான வாக்குகள் வாங்கியதால் அவர்களால் வெற்றிபெற முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News