Jammu Kashmir Election Result 2024 LIVE: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை! – வாக்கு எண்ணிக்கை நிலவரம் உடனுக்குடன்!
Jammu and Kashmir Assembly Election Results 2024 LIVE Counting and Updates: ஜம்மு காஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18ஆம் தேதி 24 தொகுதிக்கு வாக்குப்பதிவு நடந்தது. இரண்டாம் கட்டமாக 25ஆம் தேதி 26 தொகுதிகளுக்கும், இறுதிக்கட்டமாக அக்டோபர் 1 ஆம் தேதி 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான 55 சதவிகிதம் வாக்குகளை விட சட்டமன்ற தேர்தலில் 63 சதவிகித வாக்குகள் பதிவானது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டு மத்தியில் இருந்த பாஜக, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பின் முதல் முறையாக நடக்கும் தேர்தல் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அங்கு முதற்கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18ஆம் தேதி 24 தொகுதிக்கு வாக்குப்பதிவு நடந்தது. இரண்டாம் கட்டமாக 25ஆம் தேதி 26 தொகுதிகளுக்கும், இறுதிக்கட்டமாக அக்டோபர் 1 ஆம் தேதி 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான 55 சதவிகிதம் வாக்குகளை விட சட்டமன்ற தேர்தலில் 63 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனால் இந்த சட்டமன்றத் தேர்தல் மீது கூடுதல் கவனம் பெற்றுள்ளது