5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Jammu Kashmir Election Results: ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்கு காங்கிரஸ் கூட்டணி.. முதலமைச்சராகும் உமர் அப்துல்லா..

ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்தது. செப்டம்பர் 18ஆம் தேதி முதல் கட்டமும், செப்டம்பர் 25ஆம் தேதி இரண்டாம் கட்டமும், அக்டோபர் 1ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடந்தது.

Jammu Kashmir Election Results: ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்கு காங்கிரஸ் கூட்டணி.. முதலமைச்சராகும் உமர் அப்துல்லா..
ஜம்மு காஷ்மீர் தேர்வு முடிவுகள் (image credit: PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Nov 2024 18:55 PM

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரில்  வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.  ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்தது. செப்டம்பர் 18ஆம் தேதி முதல் கட்டமும், செப்டம்பர் 25ஆம் தேதி இரண்டாம் கட்டமும், அக்டோபர் 1ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடந்தது. இங்கு மொத்த வாக்காளர்கள் 88 லட்சம் பேர் இருக்கும் நிலையில், மூன்று கட்டங்களிலும் சேர்த்து 64.88 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கைக்காக 20 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் வாக்கு எண்ணிக்கை:

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. இதில் 1,130 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், முக்கியமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கந்தர்பால் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

Also Read: ஹரியானாவில் யார் ஆட்சி? இன்று வாக்கு எண்ணிக்கை.. உச்சக்கட்ட பாதுகாப்பு!

பிடிபியின் மிக முக்கியமான முகமாக இல்திஜா முஃப்தி பிஜ்பெஹாரா தொகுதியில் போட்டியிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவராக இருப்பவர் ரவீந்தர் ரெய்னா. இவர் நவ்ஷேரா தொகுதியில் போட்டியிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா ஸ்ரீநகர் மாவட்டத்தின் மத்திய ஷால்தெங் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். பாஜகவின் அல்தாஃப் புகாரி சன்னபோரா தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இவர்கள் முக்கியமான வேட்பாளர்களாக உள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தேர்தல்:

ஜம்மு காஷ்மீருக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதற்கு முன்பு கடந்த 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஒருங்கிணைந்த மாநிலமாக ஜம்மு காஷ்மீர் எதிர்கொண்ட கடைசி தேர்தல் இதுவாகும். இதன்பிறகு 2019ஆம் ஆண்டு  தேசிய பாதுகாப்பு, தீவிரவாதிகள் ஊடுருவல் போன்றவற்றைக் காரணம் காட்டி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியது.

அத்துடன் ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேகங்களாக மாற்றியது. இந்த சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. பல கட்ட விசாரணைக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பாஜக கடும் பின்னடவு சந்தித்துள்ளது.

Also Read: காஷ்மீரில் வெற்றி யாருக்கு? – வாக்கு எண்ணிக்கை நிலவரம் உடனுக்குடன்!

அதில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது சட்டப்படி செல்லும் என தெரிவித்திருந்தது. எனவே சுமார் 10 ஆண்டுகளுக்கு தேர்தல் நடந்துள்ள நிலையில், இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

மேலும், பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பேரவை அமையும் என்பதே கூறப்பட்டுள்ளது. அதேநேரம் காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. மேலும், பாஜக கடந்த முறையை விட சற்று அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் பிடிபிக்கு சொற்ப இடங்களே கிடைக்கும் என்று கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல் நிலவரம்:

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ஆம் ஆண்டு கடைசியாக தேர்தல் நடந்தது. அப்போது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 25 இடங்களில் வென்ற பாஜகவும், 28 இடங்களை கைப்பற்றிய மக்கள் ஜனநாயக கட்சியும், கூட்டணி சேர்த்து ஆட்சி அமைத்தன.

முதல்வராக இருந்த பிடிபி தலைவர் முஃப்தி முகமது சையத் 2016ல் காலமானதை தொடர்ந்து, அவரது மகன் பெஹபூபா முஃப்தி முதல்வரானார். ஆனால், 2018ல் மக்கள் ஜனநாயக கூட்டணியை பாஜக முறித்ததால் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பிறகு ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் ஆளுநர் கட்டுப்பாட்டுக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News