Jammu Kashmir Election Results: காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்.. 2 இடங்களில் உமர் அப்துல்லா முன்னிலை!
J&K Election Results 2024:ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் 18 , செப்டம்பர் 25, அக்டோபர் 1 ஆகிய 3 தினங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியாகவும், பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தனித்தும் களம் கண்டுள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை விட இந்த சட்டமன்ற தேர்தலில் அதிகளவு வாக்குகள் பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எகிறியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் நடக்கும் முக்கியமான தேர்தல் என்பதால் அனைவரின் பார்வையும் இரு மாநிலங்கள் மேல் திரும்பியுள்ளது. இதனிடையே ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவராக உள்ள உமர் அப்துல்லா இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டார். கடுமையாக பரப்புரை மேற்கொண்ட அவர் இரண்டு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கையின்போது முன்னிலை வகித்து வருகிறார். இது அவருடைய ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உமர் அப்துல்லா புத்கம் மற்றும் கந்தர்பால் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் புத்கம் தொகுதியில் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், கந்தர்பால் தொகுதியில் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலை வகித்து வருகிறார்.
#JammuAndKashmirElection2024 | JKNC vice president Omar Abdullah continues to lead in both seats – Budgam and Ganderbal, as per official EC trends. pic.twitter.com/xkB0P0Hhu0
— ANI (@ANI) October 8, 2024
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் 18 , செப்டம்பர் 25, அக்டோபர் 1 ஆகிய 3 தினங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியாகவும், பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தனித்தும் களம் கண்டுள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை விட இந்த சட்டமன்ற தேர்தலில் அதிகளவு வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தலில் பதிவாக வாக்குகள் அனைத்தும் 20 மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 873 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் 2014 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. இதனையடுத்து 2019ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி, மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்கி நடவடிக்கை எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேகங்களாக மாற்றியமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.
காஷ்மீரைப் பொறுத்தவரை கண்டிப்பாக அங்கு கூட்டணி ஆட்சி அமையும். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என சொல்லப்படுகிறது. ஆட்சியமைக்க 45 தொகுதிகளுக்கும் மேல் மெஜாரிட்டி தேவை என்பதால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.