Jharkhand Assembly Elections 2024: ஜார்க்கண்ட சட்டமன்ற தேர்தல்.. முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
Jharkhand: ஜார்க்கண்டில் உள்ள 43 தொகுதிகளுக்கும் இன்று முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவுக்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் நேரம் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில் அதற்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடுகள் அனைத்து நிறைவடைந்துள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை இந்த கூட்டணியில் உள்ள நிலையில் அங்குள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 13 ஆம் தேதியான இன்றும், 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் நவம்பர் 20 ஆம் தேதியும் நடக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் நவம்பர் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: திருமண சர்ச்சை.. சூரியனார் கோயில் மடத்தை விட்டு வெளியேறிய ஆதீனம்..!
முதற்கட்ட வாக்குப்பதிவு
இதனிடையே ஜார்க்கண்டில் உள்ள 43 தொகுதிகளுக்கும் இன்று முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவுக்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் நேரம் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் சுமார் 1.37 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதில் 68.73 லட்சம் ஆண் வாக்காளர்களும், 68.36 லட்சம் பெண் வாக்காளர்களும், 303 மூன்றாம் பாலித்தனவர்களும் ஜனநாயக கடமையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Preparations underway at St Columbus College polling booth in Hazaribagh, ahead of the first phase of voting to be held today.#JharkhandAssemblyPolls2024 pic.twitter.com/EY6WBe9YiT
— ANI (@ANI) November 13, 2024
இந்த பட்டியலில் 1.91 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 85 வயதை பூர்த்தி செய்த வாக்காளர்கள் 63,601 பேரும், 6.51 லட்சம் பேர் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நட்சத்திர வேட்பாளர்கள்
பார்ஹெய்த் தொகுதியில் முதல்வர் ஹேமந்த் சோரன், கண்டே தொகுதியில் அவரது மனைவி கல்பனா சோரன், துமுகாவில் ஹேமந்த் சோரன் சகோதர் பசந்த் சோரன், ஜெகநாத்பூர் தொகுதியில் பாஜக முன்னாள் முதல்வர் மதுகோடாவின் மனைவி கீதா கோடாவும், சரேய்கெல்லா தொகுதியில் சம்பாய் சோரனும், ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் ஒடிசா ஆளுநர் ரகுபர்தாஸ் மருமகள் பூர்னிமா தாஸ் சாகுவும், லோஹர்தாகாவில் மாநில காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வர் ஓரோனும் அமைச்சர் பன்னா குப்தா ஜாம்ஷெட்பூர் மேற்கு தொகுதியிலும் நட்சத்திர வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.
Also Read: கருணாநிதி, ஜெயலலிதாவை விட பெரிய ஆளா? – விஜய்யை விமர்சித்த சீமான்!
ஜார்க்கண்டை பொறுத்தவரை அங்கு மீண்டும் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. அதேசமயம் பாஜகவும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எப்படியாவது இந்த தேர்தலை வென்று விட வேண்டும் என உறுதியுடன் களம் கண்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா தொடங்கி அனைத்து பாஜக தலைவர்களும் ஜார்க்கண்டில் பம்பரமாக சுழன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனித்து ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் 41 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றிப் பெற வேண்டும் என்பதால் அங்கு மீண்டும் கூட்டணி ஆட்சி தான் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கே வாக்குச்சாவடிகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து அனைத்து ஏற்பாடுகளையும் சரி பார்த்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்த வண்ணம் உள்ளனர்.
முன்னதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் தனி உதவியாளரான சுனில் ஸ்ரீவத்சவா என்பவர் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தேர்தல் நேரத்தில் பழிவாங்கும் நடவடிக்கை என ஹேமந்த் சோரன் கடுமையாக விமர்சித்திருந்தார். மொத்தம் 7 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படியான கலவரங்களுக்கு மத்தியில் இன்று அங்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.