ஜார்க்கண்ட் தேர்தலில் கடும் அதிர்ச்சி.. முதல்வர் மனைவி கல்பனாவுக்கு பெரும் ஷாக்!

Kalpana Murmu Soren: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா முர்மு பின்னடைவை சந்தித்து வருகிறார்.

ஜார்க்கண்ட் தேர்தலில் கடும் அதிர்ச்சி.. முதல்வர் மனைவி கல்பனாவுக்கு பெரும் ஷாக்!

ஹேமந்த் சோரன் உடன் கல்பனா முர்மு

Updated On: 

23 Nov 2024 14:54 PM

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள காண்டே சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 81 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டசபைக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், பின்னடைவை சந்தித்து வருகிறார். இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முனியா தேவி இவருக்கு பெரும் சவாலாக திகழ்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், காண்டே இடைத்தேர்தலில் கல்பனா சோரன் வெற்றி பெற்றார்.

தொகுதி நிலவரம்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிதி மாவட்டத்தில் காண்டே சட்டமன்றத் தொகுதி அமைந்துள்ளது. இது, கோடர்மா நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காண்டே பல்வேறு வாக்காளர் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.
இந்தத் தொகுதியில் பட்டியல் சாதி (SC) வாக்காளர்கள் 11.35% (30,541), பட்டியல் பழங்குடியினர் (ST) வாக்காளர்கள் 20.23% (54,436), மற்றும் முஸ்லீம் வாக்காளர்கள் 26.115% (72,115) மிகுந்து காணப்படுகின்றனர்.
மேலும், இத்தொகுதி முக்கியமாக கிராமப்புறமாக உள்ளது, கிராமப்புற வாக்காளர்கள் 96.58% (259,881) ஆக உள்ளனர். நகர்புற வாக்காளர்களை பொறுத்தவரை 3.42% (9,203) மட்டுமே உள்ளனர்.

இதையும் படிங்க: 2 லட்சம் வாக்குகள் முன்னிலை.. பா.ஜ.க வேட்பாளரை புலம்ப விட்ட பிரியங்கா காந்தி!

கல்பனா சோரன் தொகுதியில் கடும் போட்டி

இந்தத் தொகுதியில் இந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் கல்பனா சோரன் எளிதில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அவர் பின்தங்கி காணப்படுகிறார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் முனியா தேவி 65,336 வாக்குகள் பெற்று, 59,604 வாக்குகள் பெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கல்பனா முர்மு சோரனை விட 5,732 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

பாஜக தொடர் முன்னிலை

முன்னதாக, 10வது சுற்று நிலவரப்படி, பாரதிய ஜனதா கட்சியின் முனியா தேவி 55,846 வாக்குகள் பெற்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கல்பனா முர்மு சோரனை விட 7,634 வாக்குகள் வித்தியாசத்தில் 48,212 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஹேமந்த் சோரன் முன்னிலை

ஜேஎம்எம் வேட்பாளர் ஹேமந்த் சோரன் தற்போது 36,342 வாக்குகள் முன்னிலையிலும், பாஜகவின் கம்லியேல் ஹெம்ப்ரோம் 18,358 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளனர்.
ஹேமந்த் சோரன், தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) மற்றும் ஜார்க்கண்ட் லோக் கிராந்தி மோர்ச்சா (ஜேஎல்கேஎம்) போன்ற சிறிய கட்சிகளின் வேட்பாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) கம்லியேல் ஹெம்ப்ரோமை எதிர்த்து களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மராட்டிய தேர்தல்.. ஏக்நாத் ஷிண்டே, ஆதித்ய தாக்கரே நிலவரம் என்ன?

நடிகை சோபிதா துலிபாலாவின் சினிமா பயணம்..!
எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...
பாடகி ஜோனிதா காந்தியைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்!
உடலுக்கு தினமும் ஏன் புரதம் முக்கியம்..?