Maharashtra: நோட்டாவை விட குறைவான ஓட்டு.. பிக்பாஸ் பிரபலத்துக்கு நேர்ந்த சோதனை!
Ajaz Khan: சந்திரசேகரின் கட்சியான ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) சார்பில் அஜாஸ் கான் போட்டியிட்ட நிலையில் மிகத்தீவிரமாக பரப்புரை மேற்கொண்டார். அவருக்காக கட்சித்தலைவர் சந்திரசேகர் மும்பைக்கு வந்து அஜாஸூக்காக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் வந்தபோது அஜாஸ் கானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
தேர்தல் சுவாரஸ்யம்: மகாராஷ்ரா சட்டமன்ற தேர்தலில் பிக்பாஸ் பிரபலம் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. அவரை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். கடந்த நவம்பர் 20ஆம் தேதி மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டது. இந்த தேர்தலில் இன்ஸ்டாகிராம் பிரபலமும், பிக் பாஸ் மூலம் மக்களிடம் பரீட்சையம் அடைந்த அஜாஸ் கான் என்பவரும் போட்டியிட்டார். அஜாஸ் கான் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மும்பையின் வெர்சோவா தொகுதியில் களம் கண்டார்.
Also Read: Maharastra: தேர்தல் வெற்றி.. கொண்டாட சென்ற மகாராஷ்ட்ரா தேர்தல் வேட்பாளருக்கு நேர்ந்த சோகம்!
சந்திரசேகரின் கட்சியான ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) சார்பில் அஜாஸ் கான் போட்டியிட்ட நிலையில் மிகத்தீவிரமாக பரப்புரை மேற்கொண்டார். அவருக்காக கட்சித்தலைவர் சந்திரசேகர் மும்பைக்கு வந்து அஜாஸூக்காக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் வந்தபோது அஜாஸ் கானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அவர் மொத்தமே 155 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். வெர்சோவா தொகுதியில் நோட்டாவுக்கு மட்டும் 1298 வாக்குகள் கிடைத்த நிலையில் அதில் ஒரு பங்கு மட்டுமே அஜாஸ் கான் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
View this post on Instagram
இதனால் அவரின் தோல்வி மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அஜாஸ் கான், “சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் வெற்றியை விட எனது தோல்விதான் இன்றைய நாளில் அதிகம் விவாதிக்கப்படுகிறது” என கூறியுள்ளார். மேலும், “பிரேக்கிங் நியூஸ் தயாரிக்கப்படும் நிலையில் வெற்றி பெற்றவரைப் பற்றி செய்தி செய்யுங்கள்” என்றார். அஜாஸ் வெறும் 155 வாக்குகள் தான் பெற்றுள்ளார் என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா?, நான் ஒரு சமூக சேவகர் என்பதால் இதுபோன்ற தலைப்புச் செய்திகளைப் பற்றி கவலைப்படுவதில்லை” என தோல்வியை ஸ்போர்டிவாக எடுத்துக் கொண்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
ரீல் .. ரியல் வாழ்க்கை
சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் இழந்து தோல்வியடைந்த அஜாஸ் கானுக்கு இன்ஸ்டாகிராம் செயலியில் மட்டும் 56 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். இப்படியான நிலையில் அதில் உள்ளவர்கள் கூட அவருக்கு ஓட்டு போடவில்லை என பலரும் கிண்டலடித்துள்ளனர். அஜாஸ்கான் நடந்தது மூலம் ரீல் வாழ்க்கை என்றும் உண்மையானது அல்ல என்ற உண்மை வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது, குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பிரபலமானால் அரசியலில் ஜெயிக்கலாம் என நினைப்பவர்களுக்கு அடிமேல் அடி விழுந்ததாக தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தல்
மொத்தமாக 288 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் தொடக்கம் முதலே பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. மகாராஷ்டிராவை பொருத்தவரை பாஜக கூட்டணியில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளது. இதேபோல் காங்கிரஸ் கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா கட்சி, சரத்பவார் தலைமையிஆன தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றிருக்கிறது.
தேர்தலில் பாஜக கூட்டணி 233 தொகுதிகளை கைப்பற்றி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. அதே சமயம் காங்கிரஸ் கூட்டணி கருத்துக்கணிப்புகளை விட குறைவான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. தோல்வி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர உள்ள நிலையில் அங்கு முதலமைச்சராக யார் வருவார் என்று எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே ஆகியோரிடையே போட்டி நிலவி வருகிறது.ஆனால் குறிப்பிடத்தக்கது.