Maharashtra and Jharkhand Election Result 2024 LIVE: நாக்பூரில் தேவேந்திர பட்னாவிஸ் நிலவரம் என்ன? யார் முன்னணி?
Maharashtra Jharkhand Assembly Election Results 2024 LIVE Counting and Updates : மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்டில் உள்ள 81 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
LIVE NEWS & UPDATES
-
Maharashtra Election Results Live: மகாராஷ்டிராவின் முதல்வர் பதவி யாருக்கு?
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், முதல்வர் பதவி குறித்து பேசிய ஏக்நாத் ஷிண்டே, “அதிக இடங்களைப் பெற்றவர் முதல்வராக தேர்வு செய்யப்படுவார். ஆனால் தற்போது யார் என்பவர் உறுதியாக சொல்ல முடியாது” என்றார்.
-
நாக்பூரில் தேவேந்திர பட்னாவிஸ் நிலவரம் என்ன? யார் முன்னணி?
பாரதிய ஜனதா கட்சியின் அதி முக்கிய தொகுதிகளான நாக்பூரில் உள்ள தென் மேற்கு தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் தற்போது பட்னாவிஸ் முன்னிலை வகிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் குடாதே-பாட்டீல் பின்தங்கியுள்ளார். ஃபட்னாவிஸ் 2009 ஆம் ஆண்டு முதல் நாக்பூர் தென்மேற்கு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. -
Maharashtra Election Results Live: மக்களுக்கு நன்றி – ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிரா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது மாபெரும் வெற்றியாகும். மகாயுதி கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று முன்பே கூறியிருந்தேன். சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மகாயுதி கட்சிகளின் அனைத்துத் தொண்டர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சிவசேனை கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
#WATCH | Thane | As Mahayuti is set to form govt in the state, Maharashtra CM & Shiv Sena leader Eknath Shinde says, ” I thank the voters of Maharashtra. This is a landslide victory. I had said before that Mahayuti will get a thumping victory. I thank all sections of the society.… pic.twitter.com/nfYcRBXyjP
— ANI (@ANI) November 23, 2024
-
Maharashtra Assembly Election Results Live: ஏக்நாத் ஷிண்டே வீட்டில் குவிந்த தொண்டர்கள்
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே வீட்டில் அவரது தொண்டர்கள் குவிந்துள்ளனர். பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று முன்னிலை வகித்து வரும் நிலையில், அவரை வாழ்த்துவதற்காக வீட்டில் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
#WATCH | Thane, Maharashtra: Bouquets arrive at the residence of CM and Shiv Sena chief Eknath Shinde as celebrations begin here.
Mahayuti has crossed the majority mark in #MaharashtraElectionResults, as per the official EC trends; currently leading on 214 of the 288 seats in… pic.twitter.com/E4fXeVK2ie
— ANI (@ANI) November 23, 2024
-
Maharashtra Assembly Election Results : சிவசேனை கட்சி தொண்டர்கள் கொண்டாட்டம்
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 218 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், சிவசேனை கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
#WATCH | Mumbai | Shiv Sena workers celebrate outside Maharashtra CM Eknath Shinde’s residence as Mahayuti is on its way to winning with a thumping majority in Maharashtra pic.twitter.com/fiiXK8L3K7
— ANI (@ANI) November 23, 2024
-
Maharashtra Assembly Election Results Live: அஜித் பவார் தொண்டர்கள் கொண்டாட்டம்
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் பாராமதி தொகுதியில் முன்னிலை பெற்று வருவதை அடுத்து, அவரது தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
#WATCH | Baramati, Maharashtra: Supporters of Maharashtra Deputy CM & NCP Candidate from Baramati Assembly Ajit Pawar burst crackers as Ajit Pawar is leading with 15,382 votes ss per the official EC trends.
Mahayuti has crossed the majority mark of 145 seats in the state. (BJP… pic.twitter.com/sPTHWCva8p
— ANI (@ANI) November 23, 2024
-
Jharkhand Election Results : ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆலோசனை
ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்றதை அடுத்து, ராஞ்சியில் காங்கிரஸ் கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களிலும், பாஜக கூட்டணி 31 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
-
Maharashtra Jharkhand Election Results Live: மகாராஷ்ராவில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று முன்னிலை வகித்து வரும் நிலையில், பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்காக இனிப்புகளை வாங்கி வைத்துள்ளனர்.
#WATCH | Sweets have been brought to the Mumbai BJP office as Mahayuti crosses the majority mark of 145 in Maharashtra pic.twitter.com/XgtlLlG2nE
— ANI (@ANI) November 23, 2024
-
Maharashtra Election Results Live : மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி முன்னிலை
பாஜக கூட்டணி – 203 இடங்களில் முன்னில
காங்கிரஸ் கூட்டணி -72 இடங்களில் முன்னிலை
மற்றவை – 13 இடங்களில் முன்னிலை -
Jharkhand Election Results Live: ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 41 இடங்களை பெற்றது. அதேநேரத்தில் பாஜக கூட்டணி 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இருப்பினும், பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
-
Jharkhand Election Results Live: ஜார்க்கண்டில் யார் முன்னிலை?
ஜார்க்கண்டில் எந்த கட்சி முன்னிலை உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
#JharkhandAssemblyElection2024 | Initial trends by Election Commission come in.
Mahagathbandhan leading on 4 seats (JMM, Congress, RJD and CPI(ML)(L) on 1 seat each)
BJP leading on 1
JLKM on 1 pic.twitter.com/o8GnlRURaX— ANI (@ANI) November 23, 2024
-
Maharashtra Election Results Live: மகாராஷ்ராவில் யார் முன்னிலை?
மகாராஷ்டிராவில் எந்த கட்சி முன்னிலை உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பாஜக – 10 இடங்களில் முன்னிலை
சிவசேனை – 9 இடங்களில் முன்னிலை
தேசியவாத காங்கிரஸ் – 8 இடங்களில் முன்னிலை
தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) – 4 இடங்களில் முன்னிலை
காங்கிரஸ் – 2 இடங்களில் முன்னிலை
சிவசேனை (உத்தவ் தாக்கரே அணி) – 2 இடங்களில் முன்னிலை
Maharashtra election 2024: BJP-led Maha Yuti alliance takes early lead with 18 seats
Read @ANI Story | https://t.co/wEGP0BTBAL#Maharashtra #Mahayuti #AssemblyElections2024 pic.twitter.com/42h0ktfUKN
— ANI Digital (@ani_digital) November 23, 2024
-
Maharashtra Jharkhand Election Results Live: மகாராஷ்ரா, ஜார்க்கண்டில் கடும் போட்டி
மகாராஷ்டிரா
பாஜக கூட்டணி – 132 இடங்களில் முன்னிலை
காங்கிரஸ் கூட்டணி – 123 இடங்களில் முன்னிலைஜார்க்கண்ட்
பாஜக கூட்டணி – 34 இடங்களில் முன்னிலை
காங்கிரஸ் கூட்டணி – 27 இடங்களில் முன்னிலை -
Maharashtra Jharkhand Election Results : பாஜக கூட்டணி முன்னிலை
ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்ராவில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 113 இடங்களிலும், ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி 31 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது
-
Maharastra Election Results Live : அஜித் பவார் முன்னிலை
மகாராஷ்டிராவில் பாராமதி தொகுதியில் போட்டியிட்ட அஜித் பவார் முன்னிலை வகித்து வருகிறார்.
-
Maharastra Jharkhand Election Result Live: மகாராஷ்ரா, ஜார்க்கண்டில் யார் முன்னிலை?
தற்போதைய நிலவரப்படி, மகாராஷ்ராவில் பாஜக கூட்டணி 59 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி 16 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
-
Maharashtra Jharkhand Election Results Live : இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
ஜார்க்கண்ட மற்றும் மகாராஷ்டிராவில் தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி 16 இடங்களிலும், காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணி 12 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. மகராஷ்ராவில் பாஜக கூட்டணி 41 இடங்களில் முன்னிலையில் உள்ளன
-
Jharkhand Election Result Live: ஜார்க்கண்டில் யார் முன்னிலை?
ஜார்க்கண்டில் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, என்.டி.ஏ கூட்டணி இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி இரண்டு இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
-
Maharashtra Election Results Live : மகாராஷ்டிராவில் யார் முன்னிலை?
மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணி 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாராமதி தொகுதியில் அஜித் பவார் பின்தங்கியுள்ளார்.
-
Maharashtra Jharkhand Election Results Live : தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது
ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்ரா சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
-
Maharashtra Jharkhand Election Results Live : பாஜக தலைமையகத்தில் கொண்டாட்டம்
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஜிலேபி தயார் செய்யப்பட்டு வருகிறது.
#WATCH | Jalebis being prepared at BJP headquarters in Delhi, on votes counting day for Maharashtra and Jharkhand elections pic.twitter.com/MnZubGrLO9
— ANI (@ANI) November 23, 2024
-
Maharashtra Jharkhand Election Results Live : வாக்கு எண்ணிக்கை துவங்கியது
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது.
-
Maharashtra Jharkhand Election Results Live : சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்னும் சற்று நேரத்தில் எண்ணப்படுகிறது.
-
Jharkhand Election Results Live : ஜார்க்கண்டில் காங்கிரஸ் நம்பிக்கை
மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜேஷ் தாக்கூர் கூறுகையில், “இனி சிறிது நேரத்தில், டிரெண்டுகள் வரத் தொடங்கும். நாங்கள் மீண்டும் ஒரு வலுவான அரசாங்கத்தை அமைப்போம் என்று நம்புகிறோம், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு எங்கள் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வோம். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்” என்றார்.
#WATCH | Ranchi: Ahead of the counting of votes for #JharkhandElection2024, former state Congress president Rajesh Thakur says, “A short while from now, trends will start coming in. From what I can understand, the results of the work we did is going to be out. The manner in which… pic.twitter.com/5H448YZOkJ
— ANI (@ANI) November 23, 2024
-
Maharashtra Jharkhand Election Results Live : முதலில் தபால் வாக்குகள்
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இந்த முடிவுகள் 9.30 மணிக்கு அறிவிக்கப்படும். அதன் பின்பு, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
-
Maharashtra Election Results Live : பலத்த போலீஸ் பாதுகாப்பு
மகாராஷ்டிராவில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
#WATCH | Outside visuals from a voting counting centre in Baramati as the counting for 288 assembly seats for #MaharashtraAssemblyElections2024 is expected to begin at 8 am.
Deputy CM Ajit Pawar of NCP is the candidate against Yugendra Shriniwas Pawar of NCP-SCP, in Baramati pic.twitter.com/y8QvWDl4Gz
— ANI (@ANI) November 23, 2024
-
Maharashtra Election Results Live : மகாராஷ்டிராவில் எத்தனை வேட்பாளர்கள்?
2019 சட்டசபை தேர்தலை விட இந்த முறை வேட்பாளர்களின் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தேர்தலில் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2019 தேர்தலில் 3,239 வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். இந்த வேட்பாளர்களில் 2,086 பேர் சுயேச்சைகள்.
-
Jharkhand Election Results Live : ஜார்க்கண்ட் 2019 தேர்தல் முடிவுகள்
ஜார்க்கண்டில் 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜார்க்கண்டி முக்தி மோர்ச்சா கட்சி 30 இடங்கள், காங்கிரஸ் 16 இடங்கள், ராஷ்டிரிய ஜனதா தளம் 1 இடங்கள், பாஜக 25 இடங்கள், ஜேவிஎம் 3 இடங்கள், அனைத்து ஜார்க்கண்ட மாணவர் கட்சி 2 இடஙகள், சிபிஐ(எம்எல்) 1 இடங்கள், சுயேட்சைகள் 2 இடங்கள் என கைப்பற்றின
-
Maharashtra Election Results Live : மகாராஷ்டிரா 2019 தேர்தல் முடிவுகள்
2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 105 இடங்கள், சிவசேனை 56 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்கள், காங்கிரஸ் 44 இடங்கள், மஜ்லிஸ்ட் கட்சி 2 இடங்களை கைப்பற்றியது.
-
Jharkhand Election Results Live : ஜார்க்கண்டில் வெற்றி யாருக்கு?
ஜார்க்கண்டில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி, காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்றும் இல்லையென்றால் தொங்கு சட்டசபை உருவாகலாம் என்று தெரிவித்திருக்கின்றன.
-
Maharashtra Election Results Live : மகாராஷ்ராவில் யாருக்கு வெற்றி?
மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி, பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவித்திருக்கின்றன.
-
Jharkhand Election Results Live : ஜார்க்கண்ட் தேர்தல் களம்
ஜார்க்கண்டில் முக்தி மோச்சா தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. ஜார்க்கண்டில் 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
-
Maharashtra Election Results Live : மகாராஷ்டிரா தேர்தல் களம்
மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பாஜக 149, சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே அணி) 81, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) 59 தொகுதிகளில் போட்டியிட்டன. மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ் 101, சிவசேனை (உத்தவ் தாக்கரே அணி) 86, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) 86 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
-
Maharashtra Election Results Live : 288 வாக்கு எண்ணும் மையங்கள்
மகாராஷ்டிராவில் ஒரு தொகுதிக்கு ஒரு வாக்கு எண்ணும் மையம் என்ற அடிப்படையில் மொத்தம் 288 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
-
Jharkhand Election Results Live : ஜார்க்கண்டில் 81 தொகுதிகள்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக 41 இடங்கள் வெல்ல வேண்டும். இம்மாநிலத்தில் நவம்பர் 13,20 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
-
Maharashtra Election Result Live: மகாராஷ்ராவில் எத்தனை தொகுதிகள்?
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை. இம்மாநிலத்தில் ஒரே கட்டமாக கடந்த 20ஆம் தேதி தேர்தல் நடந்த நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
-
Maharashtra Jharkhand Election Result 2024: காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகளும், இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளும் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட மாநிலத்தில் 2 கட்டமாகவும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மொத்தம் 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்டில் முதல் கட்டமாக 43 தொகுதிகளில் கடந்த 13ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்டில் எஞ்சிய 38 தொகுதிகளுக்கு 2ஆம் கட்டமாகவும், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20ஆம் தேதி தேர்தல் நடந்தது.
மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பாஜக 149, சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே அணி) 81, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) 59 தொகுதிகளில் போட்டியிட்டன. மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ் 101, சிவசேனை (உத்தவ் தாக்கரே அணி) 86, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) 86 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
மொத்தம் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 62 சதவீத வாக்குகள் பதிவாகின. அதேபோல, ஜார்க்கண்டில் முக்தி மோச்சா தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. ஜார்க்கண்டில் 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. எனவே, இரண்டு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.