அரியணை யாருக்கு? மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் வாக்கு எண்ணிக்கை!

Maharashtra Jharkhand Assembly Election Results: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதனால் இன்று மாநிலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரியணை யாருக்கு? மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் வாக்கு எண்ணிக்கை!

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்

Updated On: 

23 Nov 2024 07:00 AM

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அரசியில் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக 145 இடங்களில் வெல்ல வேண்டும்.  இங்கு ஒரே கட்டமாக கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆண்கள் 5 கோடி பேர், பெண்கள் 4.69 கோடி பேர், மூன்றாம் பாலினத்தவர் 6,101 பேர் என மொத்தம் 9.70 கோடி வாக்காளர்கள் இருக்கும் நிலையில், 65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில், இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

மகாராஷ்ராவில் வெற்றி யாருக்கு?

இதற்கான ஏற்பாடுகளும் நிலையில் உள்ளன.  மகாராஷ்டிராவில் ஒரு தொகுதிக்கு ஒரு வாக்கு எண்ணும் மையம் என்ற அடிப்படையில் மொத்தம் 288 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும்   பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக 149, சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே அணி) 81, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) 59 தொகுதிகளில் போட்டியிட்டன. எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ் 101, சிவசேனை (உத்தவ் தாக்கரே அணி) 86, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) 86 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இது தவிர பகுஜன் சமாஜ் கட்சி 237 தொகுதிகளில் போட்டியிட்டது. இக்கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 4,335 வேட்பாளர்கள் களத்தில் உள்ளன. இதில் முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே கேப்ரி – பச்பகாடி தொகுதியில் போட்டியிட்டார்.

Also Read : இரு மாநில தேர்தல் முடிவுகள்.. மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் வெற்றி யாருக்கு?

அதேபோல, துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் நாகபுரி தென்மேற்கு தொகுதியிலும், மற்றொரு துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவார் பாராமதி தொகுதியிலும், மாநில காங்கிரஸ் தலைவர நானா படோலே சகோலி தொகுதியிலும், சிவசேனை (உத்தவ்) கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே வொர்லி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

ஜார்க்கண்டில் வெற்றி யாருக்கு?

ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 பேரவைத் தொகுதிளில் முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த 13ஆம் தேதி தேர்தல் நடந்தது.  இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக  38 தொகுதிகளுக்கு கடந்த 20ஆம் தேதி தேர்தல் நடந்தது. இங்கு பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை.  1.23  கோடி வாக்காளர்களுக்காக  14,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இதில் 68 சதவீத வாக்குகள் பதிவாகின.  இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஆளும்  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய  ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணிக்கும், பாஜக, அனைத்து ஜார்க்கண்ட்  மாணவர் சங்கம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

முதல்வரும ஜார்க்கண்ட்  முக்தி மோர்ச்சா செயல் தலைவருமான  ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியிலும், அரவது மனைவி கல்பனா சோரன் கண்டே தொகுதியிலும், ஹேமந்த் சோரனின் சகோதரர்  வசந்த் சோரன் தும்கா தொகுதியிலும், மாநில பாஜக தலைவர் பாபுலால் மராண்டி  தன்வர் தொகுதியிலும், அனைத்து ஜார்க்கண்ட்  மாணவர் சங்கம் கட்சி தலைவர் கதேஷ் மகதோ சில்லி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இது தவிர களத்தில் 1,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் உள்ளனர்.

Also Read : பிரதமர் மோடியின் RRR வெர்ஷன்.. TV9 MD & CEO பருண் தாஸ் புகழாரம்!

எக்ஸிட் போல் சொல்வது என்ன?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவித்திருக்கின்றன. அதாவது, பாஜக கூட்டணி 137 இடங்கள் முதல் 157 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 126 முதல் 146 இடங்களிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.

மற்றவை 2 முதல் 8 இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டிருந்தது. அதேபோல, ஜார்க்கண்டில் பெரும்பாலான பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்றும் இல்லையென்றால் தொங்கு சட்டசபை உருவாகலாம் என்று தெரிவித்திருக்கின்றன.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!