5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

3.65 லட்சம் வாக்குகள் முன்னிலை.. பா.ஜ.க வேட்பாளரை புலம்ப விட்ட பிரியங்கா காந்தி!

Priyanka Gandhi in Wayanad constituency: வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

3.65 லட்சம் வாக்குகள் முன்னிலை.. பா.ஜ.க வேட்பாளரை புலம்ப விட்ட பிரியங்கா காந்தி!
ராகுல் காந்தி உடன் பிரியங்கா காந்தி
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Updated On: 23 Nov 2024 14:51 PM

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக கேரளாவின் வயநாடு எம்.பி.யாக பதவியேற்க உள்ளார். ராகுல் காந்தி ரேபரேலிக்கு மாறியபோது வயநாடு தொகுதியை காலி செய்தார். தொடர்ந்து, நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி களம் கண்டார். அவர், தற்போது, 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். வயநாட்டில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி இதுவரை 3.65 லட்சம் வாக்குகள் முன்னணியில் உள்ளார்.

வயநாட்டில் பின்தங்கிய பா.ஜ.க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் சத்யன் மொகேரி 2.08 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும்ம், பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் 1.10 லட்சம் வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
வயநாட்டில் பிரியங்கா காந்தி உட்பட மொத்தம் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ராகுல் காந்தி 2019 இல் முதல் முறையாக இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது அவர் உத்தரப் பிரதேசத்தின் அமேதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில், அவர் வயநாடு மற்றும் ரேபரேலி இரண்டிலும் போட்டியிட்டார்.

இதையும் படிங்க : மகாராஷ்டிரா 2024 தேர்தல்.. ஒரே தொகுதியில் மோதும் இரு தமிழர்கள்.. யாருக்கு வெற்றி?

பிரியங்கா காந்தி போட்டி

முன்னதாக சோனியா காந்தி மாநிலங்களவை மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இந்நிலையில் இம்முறை இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்ற அவர், ரேபரேலியை வைத்து தனது சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவை வயநாட்டில் போட்டியிட வைக்க முடிவு செய்தார்.
இதற்காக, கடந்த ஒரு மாதமாக பிரியங்கா காந்திக்காக ராகுல் காந்தியும் அவரது தாயும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

3.65 லட்சம் வாக்குகள் முன்னிலை

இந்த நிலையில் பிரியங்கா காந்தி 3.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இந்த வெற்றியை காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடிவருகின்றனர்.
முடிவுகள் அறிவிக்கப்படும்பட்சத்தில் பிரியங்கா காந்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க வேட்பாளர் புலம்பல்

வயநாட்டில் பிரியங்கா காந்தியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் நவ்யா நாயர் போட்டியிட்டார். மென்பொருள் என்ஜினீயரான இவர், இரு முறை பா.ஜ.க கவுன்சிலராக இருந்துள்ளார்.
இந்நிலையில் இந்தத் தேர்தல் குறித்து பேசிய நவ்யா, “மக்கள் வேட்பாளரை தேர்ந்தெடுக்கவில்லை. சின்னத்தை தேர்வு செய்துள்ளனர். வளர்ச்சி அரசியலை விடுத்து சின்னத்தை வைத்து தேர்தலை பார்ப்பதை எப்படி எடுத்துக் கொள்வது?” என்றார்.

15 மாநில இடைத்தேதர்தல், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்

இன்று, மொத்தம் 15 மாநிலங்களில் உள்ள 48 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
அதேபோல், மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளும் இன்று அறிவிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மராட்டிய தேரதல்.. ஏக்நாத் ஷிண்டே, ஆதித்ய தாக்கரே நிலவரம் என்ன?

Latest News