5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Maharashtra Assembly Election: மகாராஷ்ட்ராவை ஆள்வது யார்? – சட்டமன்ற தேர்தலில் இன்று வாக்குப்பதிவு!

Assembly Elections 2024: கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மகாராஷ்டிரா முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த பல முன்னணி தலைவர்களும் அங்கு வந்து வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தனர். நேற்று முன்தினம் மாலையில் பிரச்சாரம் ஓய்ந்தது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Maharashtra Assembly Election: மகாராஷ்ட்ராவை ஆள்வது யார்? – சட்டமன்ற தேர்தலில் இன்று வாக்குப்பதிவு!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 20 Nov 2024 07:34 AM

மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணி ஒரு பக்கமும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய எதிர்கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் கூட்டணி மறுபக்கமும் நேருக்கு நேர் களமிறங்குகிறது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்கு வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Also Read: AR Rahman: கண்ணுக்குத் தெரியாத முடிவு.. விவாகரத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை!

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மகாராஷ்டிரா முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த பல முன்னணி தலைவர்களும் அங்கு வந்து வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தனர். நேற்று முன்தினம் மாலையில் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் தொகுதிக்கு சம்பந்தமில்லாத அனைவரையும் வெளியேறுமாறு மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அனைவரும் தொகுதியில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்தனர்.

இதனையடுத்து வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றன. இந்திய நாட்டில் அதிக சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிராவும் திகழ்ந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கடந்த 5 ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் ஏகப்பட்ட அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. இதனால் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவை அனைத்தும் இந்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணி வரை நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்படுகிறது.

Also Read: பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகள்.. 18 பேரின் தலைமுடியை வெட்டிய பள்ளி முதல்வர்..

ஜார்க்கண்ட் 2ஆம் கட்ட தேர்தல்

இதற்கிடையில் ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் காண 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 13ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அன்றைய தினம் 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர்.  இதனிடையே மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் நவம்பர் 23ம் தேதி தான் எண்ணப்படுகிறது.

ஜார்க்கண்ட மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை ஒரு கூட்டணியில் உள்ளது, மற்ற கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து பாஜக சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ளது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா தொடங்கி அனைத்து முன்னணி தலைவர்களும் அம்மாநிலத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தனர். மேலும் எப்படியாவது இந்த தேர்தலை வென்றுவிட வேண்டும் என்ற கோணத்தில் இரு கூட்டணிகளும் போட்டியிட்டுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Latest News