2024-ம் ஆண்டு இதுவரை வெளியான படங்களில் அதிக வசூலை ஈட்டிய படங்களின் லிஸ்ட் இதோ
2024-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் தொடந்து வெளியாகின. அந்த வகையில் விஜய், கமல், ரஜினி, தனுஷ், விக்ரமன், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்கள் இடம் பிடித்துள்ளது. இதில் அதிக வசூலை ஈட்டிய படங்களின் தொகுப்பு குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்தியன் 2: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது இந்தியன் 2 படம். இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய சங்கரே இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பல வருடங்களாக இந்தியன் 2 திரைப்படம் எடுக்க முயற்சிகள் நடைபெற்ற வந்த நிலையில், 28 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. கமல்ஹாசன் இந்தியா தாத்தா கெட்டப்பில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுப்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரசிகர்களிடையே படம் அதிர்ப்த்தியை ஏற்படுத்தியது.
திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் இதன் 3-ம் பாகம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த இரண்டு மட்டும் மூன்றாம் பாகங்களை சேர்த்து 300 கோடி பட்ஜெட்டில் படம் உருவானது. இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் 150 கோடிகள் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
ராயன்: நடிகர் தனுஷ் தனது 50-வது படமான அவரே இயக்கி நடித்திருந்தார். இந்த படத்திற்கு ’ராயன்’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. படம் கடந்த ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிறு வயதிலேயே தனது பெற்றோரை தொலைத்த தனுஷ் கிராமத்தில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாததை உணர்ந்து தனது இரண்டு தம்பிகள் மற்றும் தங்கையுடன் சென்னையை வந்தடைகிறார். அங்கு செல்வராகவனை சந்திக்கும் தனுஷ் அவருடைய உதவியால் வேலை, வீடு என தனது தம்பிகள், தங்கையை பார்த்துக்கொள்கிறார் தனுஷ்.
சிறு வயதிலேயே பெற்றோரை தொலைத்ததால் தனது தம்பிகள், தங்கைக்கு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கிறார். அவர்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் அவர்களை காக்கும் அரணாக நிக்கிறார் தனுஷ். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக தனது முதல் தம்பி சந்தீப்கிஷன் அந்த ஏரியாவில் பெரிய தாதாவாக இருக்கும் சரவணனின் மகனை கொலை செய்து விடுகிறார்.
அந்த தாதாவிடம் இருந்து தனது தம்பி மற்றும் குடும்பத்தை எப்படி காப்பாற்றினார் தனுஷ். அதன் பிறகு என்ன எல்லாம் நடந்தது என்பதே படத்தின் கதை. குடும்பம், பாசம், துரோகம், பழிவாங்கல் என வழக்கமான டெம்ப்ளேட்டுகள் தான் படத்தின் கதை என்றாலும் அதனை சுவாரஸ்யமாக கடத்தியுள்ளார் இயக்குநர் தனுஷ்.
இப்படத்தில் தனுஷூடன் இணைந்து நடிகர்கள் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் சுமார் 160 கோடிகள் ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் வெளியானது. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
தங்கலான்: நடிகர் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தங்கலான். இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.102 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வெளியான படம் ’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள தி கோட் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பான் இந்திய படமாக இது வெளியானது.
தமிழ் நாட்டில் மட்டும் கோட் படம் கிட்டத்தட்ட 1,100 திரையரங்குகளில் வெளியானது. இந்தியா முழுவது, சுமார் 5,000 திரையரங்குகளில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படமாக இந்தப் படம் உருவானது. இந்தப் படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து சினேகா, மீனாக்ஷி செளதரி, பிரபுதேவா, பிரசாந்த், லைலா, பிரேம்ஜி, வைபவ், அஜ்மல் அமீர், மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார். படத்தில் அப்பா விஜய் ரா ஏஜென்டாக நடித்திருந்தார். இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. படம் 400 கோடி ரூபாய் செலவில் உருவான நிலையில் திரையரங்குகளில் 450 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக தகவல்கள் வெளியானது.
வேட்டையன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான பாம் வேட்டையன். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கிய இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அசல் கோலாரு அபிராமி, கிஷோர் உட்பட பலர் நடித்துள்ளனர். இசையமப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் வெளியானது. படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப்படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ. 292 கோடி வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது.
அமரன்: நடிகர் சிவகார்த்தியேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அமரன். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்திற்கு ‘அமரன்’ என்று பெயர் வைத்தனர்.
சோனி பிக்சர்ஸுடன் இணைந்து இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்தும் படம் நல்ல வசூலை செய்து வருகிறது. படம் தற்போது வரை 250 கோடிகளை கடந்தகாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்தப் படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் இன்னும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.