Cinema Year Ender: 2024-ல் வசூல் சாதனை படைத்த படங்களை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

மஞ்சுமல் பாய்ஸ் முதல் பிரேமலு வரை ஓடிடியில் 2024-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த மலையாளப் படங்களில் முதல் பத்து சூப்பர் ஹிட் மலையாளப் படங்கள் எந்த ஓடிடியில் காணக் கிடைக்கின்றது என்பது குறித்து இங்கே பார்கலாம்.

Cinema Year Ender: 2024-ல் வசூல் சாதனை படைத்த படங்களை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

படங்கள்

Published: 

17 Dec 2024 08:12 AM

மஞ்சுமல் பாய்ஸ்: இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் நடிகர்கள் சௌபின், ஸ்ரீநாத் பாசி உள்பட பலர் நடித்த படம் மஞ்சுமல் பாய்ஸ். நடிகர் சௌபின் தனது பறவா தயாரிப்பு நிறுவனம் சார்பில் தனது நண்பர்களுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தார். கேரளாவின் மஞ்சும்மல் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர். சுற்றுலா வந்த நிலையில் அந்த நண்பர்களில் ஒருவர் டெவில்ஸ் கிச்சன் என்கிற 900 அடிகள் கொண்டதாகக் கருதப்படும் மலைக்குகைக்குள் விழுந்துவிடுகிறார். உடன் வந்த நண்பர்கள் போராடி அவனை மீட்ட உண்மைக் கதையை மையமாக வைத்து மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டது. மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படம் மஞ்சும்மல் பாய்ஸ்.

மலையாளம், தமிழ், தெலுங்கு என பான் இந்திய மொழிகளிலும் சக்கை போடு போட்ட இப்படம் 200 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. இந்தப் படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஆடு ஜீவிதம்: இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்த ஆடு ஜீவிதம் திரைப்படம் கடந்த மார்ச் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கேரளாவைச் சேர்ந்த நஜீப் என்பவர் வேலைக்காக அரபு நாடுக்குச் செல்கிறார். அங்கு உள்ள முதலாளியால் ஏமாற்றப்பட்ட நஜீப் ஆடு மேய்க்கப் பணியமர்க்கப்படுகிறார்.

பாலைவனத்தில் 700 ஆடுகளுடன் தன்னந்தனியாக நஜீப் வசிக்க நேர்கிறது. ஒருகட்டத்தில் தன்னையும் ஒரு ஆடாக கருதிக் கொள்ளும் அளவுக்கு மனதளவிலும், உடலளவிலும் நஜீப்பின் நிலைமை மோசமாகிறது. இந்த நிலையில் இருந்து நஜீப் எப்படி மீண்டும் தனது சொந்த ஊருக்கு தப்பித்து வருகிறார் என்பது படத்தின் கதை.

இந்த கடினமான காலத்தைத் தாண்டி நஜீப் உயிர் எப்படி பிழைத்தார் என்ற உண்மைச் சம்பவத்தை எழுத்தாளர் பென்யாமின் ஆடு ஜீவிதம் என்ற நாவலாக எழுதியிருந்தார்.  அந்த நாவலை அடிப்படையாக கொண்டு அதனடிப்படையில் பிளெஸ்ஸி ஆடு ஜீவிதம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் நஜீப் கதாப்பாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்திருந்தார். இந்தப் படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஆவேஷம்: இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தப் படம் ஆவேஷம். நகைச்சுவை, அதிரடி நிறைந்த இந்தப் படத்தை பார்த்தவர்கள் கொண்டாடி தீர்த்தனர். படத்திற்கு படம் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தும் ஃபகத் இந்தப் படத்தில் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

கல்லூரி மாணவர்களுடன் எதிர்பாராத விதமாக ஏற்படும் நட்பு ஃபகத் பாசிலை எப்படி மாற்றுகிறது என்பதை கதைக்களமாக இந்தப் படம் வெளியனது. உலகம் முழுவதும் சுமார் 156 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது இந்தப் படம். இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

பிரேமலு: இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லென், மமிதா பைஜு நடிப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான பிரேமலு படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மலையாளத்தில் வெளியான இந்தப் படம் கேரள ரசிகர்கள் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது.

படம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. காதல், காமெடி என இளைஞர்கள் வாழ்வில் நடக்கும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையமாக வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தை பிரபல நடிகர் ஃபகத் பாசில் தயாரித்துள்ளார்.

சாதாரண கதைகளத்தை மையமாக கொண்டு உருவான இந்தப் படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

அஜயந்தே ரண்டாம் மோஷனம் (ARM): ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வித்தியாசத்தை காட்டுபவர் நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் முன்னதாக வெளியான ‘மின்னல் முரளி’ படம் மலையாளம் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்தது. சமீபத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘அஜயந்தே ரண்டாம் மோஷனம்’.

பீரியட் டிராமாவாக உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜிதின் லால் இயக்கினார். இந்தப் படத்தில் டொவினோ தாமஸ் உடன் இணைந்து கிருத்தி ஷெட்டி, பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, சிவாஜித் மற்றும் அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

குருவாயூர் அம்பலநடையில்: நடிகர்கள் பிரித்விராஜ் மற்றும் பேசில் ஜோசப் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தப் படம் குருவாயூர் அம்பலநடையில். இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரது இயக்கத்தில் முன்னதாக பேசில் ஜோசப் நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெய படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் வெளியான குருவாயூர் அம்பலநடையில் படத்தில் நிகிலா விமல், யோகி பாபு, ஜெகதீஷ், அனஸ்வர ராஜன், ரேகா, இர்ஷாத், சிஜு சன்னி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

வருஷங்களுக்கு சேஷம்: நடிகர், பாடகர், இயக்குநர் என மலையாளத் திரையுலகில் பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் வினீத் ஸ்ரீனிவாசன். இவரது இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் வருஷங்களுக்கு சேஷம். இந்தப் படத்தில் நடிகர்கள் பிரணவ் மோகன்லால் மற்றும் தயன் ஸ்ரீனிவாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இவர்களுடன் இணைந்து நடிகர்கள் நிவின் பாலி, கல்யாணி பிரியதர்ஷன், பேசில் ஜோசஃப், அஜு வர்கீஷ் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

கிஷ்கிந்தா காண்டம்: நடிகர்கள் ஆசிஃப் அலி மற்றும் அபர்ணா பால முரளி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த படம் கிஷ்கிந்தா காண்டம். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து ஜெகதீஷ், நிழல்கள் ரவி, விஜயராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  இந்தப் படத்தை இயக்குநர் திஞ்சித் அய்யாத்தான் இயக்கியுள்ளார்.

Also read… சூரி நாயகனாக நடிக்கும் அடுத்தப் படத்தின் அப்டேட் இதோ!

கிரைம் த்ரில்லர் பாணியில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

டர்போ: நடிகர் மம்முட்டி நடிப்பில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான படம் டர்போ. இந்தப் படத்தை இயக்குநர் வைசாக் இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தில் பிரபல கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி வில்லனாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடிகர்கள் அஞ்சனா ஜெயபிரகாஷ் , திலிஷ் போத்தன் , சபரீஷ் வர்மா என பலர் நடித்திருந்தனர்.

Also read… ஜெயம் ரவியின் JR 34 படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டது படக்குழு!

படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவர் வரும். அப்போது படம் இன்னும் முடியவில்லை அடுத்த பாகம் இருப்பது போன்ற லீட் ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்டது. மம்முட்டியின் மாஸ் சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்தப் படம் தற்போது சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

சூக்‌ஷ்மதர்ஷினி: சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை நஸ்ரியா மீண்டும் மலையாள சினிமாவில் நடிப்பதற்கு என்ட்ரி கொடுத்துள்ளார். அறிமுக இயக்குநர் ஜித்தின் இயக்கும் சூக்‌ஷ்மதர்ஷினிபடத்தில் நஸ்ரியா உடன் இணைந்து நடிகர் பேசில் ஜோசப் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து தீபக் பரம்போல், மெரின் பிலிப், சித்தார்த் பரதன், பூஜா மோகன்ராஜ் அகில பார்கவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்திற்கு இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் இன்னும் திரையரங்குகளில் உள்ள நிலையில் வரும் காலத்தில் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலையில் அலாரம் வைத்து எழுந்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!
நடிகை ரித்திகா சிங் சினிமா பயணம்
கொய்யா பழத்தின் பல ஆரோக்கிய நன்மைகள்!
இந்தியாவின் தலைசிறந்த செஸ் வீரர்கள்!