Indian 2 Audio Launch: இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. பிரபலங்கள் பங்கேற்பு..! - Tamil News | Indian 2 movie music launch party.. Celebrities participate. | TV9 Tamil

Indian 2 Audio Launch: இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. பிரபலங்கள் பங்கேற்பு..!

Updated On: 

01 Jun 2024 11:43 AM

பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமலின் நடிப்பில் வெளியாக இருக்கும் 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

Indian 2 Audio Launch: இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. பிரபலங்கள் பங்கேற்பு..!

இந்தியன் 2

Follow Us On

பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கமல் இந்த திரைப்படத்தில் டபுள் ஆக்ஷனில் கலக்கி இருந்தார். கமலுடன் இத்திரைப்படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, செந்தில், கவுண்டமணி ஆகியோர் நடித்திருந்தனர். இபிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமலின் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இத்திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்தியன் 2 திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டுக் கொண்டே வந்தது. பல வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் சங்கர் மற்றும் கமல் கூட்டணி இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து இருக்கிறது. ஜூலை மாதம் 12 ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: சென்னையில் வெயிலின் தாக்கத்தால் 12-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா,காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், பிரியா பவானி சங்கர் என்று பல நட்சத்திர பட்டாளங்கள் இந்நியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளிவந்த “பாரா பாரா” என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அடுத்து “நீலோற்பம்” பாடல் நேற்று வெளியானது. இரண்டு பாடல்களும் ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தில் உள்ள மீதமிருக்கும் பாடல்கள் எவ்வாறு இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தியன் திரைப்படத்தில் கதைக்களம் மிகவும் வலுவாக இருந்ததால் படம் தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்தியன் புரட்சி படமாகவே தமிழக மக்களால் இன்றளவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியன் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இசை வெளியீட்டு விழா குறித்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Also Read: Exit Poll Result 2024 Date Tamil: அரியணை யாருக்கு? மாலை 6 மணிக்கு வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில், திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, மலையாள நடிகர் மோகன்லால், நடிகர் ராம்சரண், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் சித்தார்த், நடிகர்கள் சிலம்பரசன், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுக்கு அழைப்பு விடுத்த விடுக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல மொழிகளில் திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இடையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கோலிவுட்டில் நடைபெறும் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவாக இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version