Karunakaran: நடிகர் கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு.. பணிப்பெண் கைது! - Tamil News | 60 savaran Jewellery was stolen from actor Karunakaran's house in chennai | TV9 Tamil

Karunakaran: நடிகர் கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு.. பணிப்பெண் கைது!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள காரப்பாக்கம் பகுதியில் நடிகர் கருணாகரன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகைகள் சமீபத்தில் திருடு போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கருணாகரனின் மனைவி தென்றல் சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கண்ணகி நகர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

Karunakaran: நடிகர் கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு.. பணிப்பெண் கைது!

கோப்பு புகைப்படம்

Updated On: 

16 Oct 2024 14:37 PM

நடிகர் வீட்டில் திருட்டு: பிரபல காமெடி நடிகர் கருணாகரன் வீட்டில் 60 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அவரது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள காரப்பாக்கம் பகுதியில் நடிகர் கருணாகரன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகைகள் சமீபத்தில் திருடு போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கருணாகரனின் மனைவி தென்றல் சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கண்ணகி நகர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கருணாகரன் வீட்டில் ஆய்வு செய்தபோது நகைகள் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பீரோ உடைக்கப்படாமல் இருந்துள்ளது. அதேபோல் வீட்டின் பூட்டும் உடைக்கப்படாததால் வெளிநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதை போலீசார் முதலில் உறுதி செய்தனர்.

Also Read: Meesho : ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீஷோ.. 9 நாட்கள் விடுமுறை அளித்து அசத்தல்.. ஏன் தெரியுமா?

இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் வேலை செய்பவர்களின் கைரேகைகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் போலீசாருக்கு தடயும் சிக்கியது.  இந்த சம்பவத்தில் கருணாகரன் வீட்டில் பணிபுரியும் காரப்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜயா என்ற பெண் தான் நகை திருடியது உறுதியானது. இதனை தொடர்ந்து பணிப்பெண் விஜயவை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also ReadRation Card : ரேஷன் அட்டை பயனர்களுக்கு முக்கிய செய்தி.. புதிய விதிமுறைகளை கொண்டு வந்த தமிழக அரசு!

கருணாகரன் 2011 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கிய கலகலப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சூது கவ்வும், பீட்சா, யாமிருக்க பயமே, ஜிகர்தண்டா, லிங்கா, கப்பல், இன்று நேற்று நாளை, தொடரி, விவேகம், ஹரஹர மகாதேவகி, ராட்சசன், ஜீவி, டெடி, அயலான் என 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். அவரது வீட்டில் திருட்டு நடைபெற்ற சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

பிரபலங்கள் வீட்டில் தொடரும் திருட்டு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. இதேபோல் கோவையில் நடிகை அதுல்யா ரவி வீட்டிலும் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நடந்த திருட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். வீட்டில் நகை லாக்கர் இருக்கும் இடமும்,  அதற்கான சாவி இருக்கும் இடமும் தெரிந்துள்ளதால் கூட்டு சேர்ந்து இவர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளார்கள். கிட்டத்தட்ட 100 சவரன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 30 கிராம் வைர நகைகள் மற்றும் வீட்டு பத்திரம் ஆகியவை இருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் கோவை வடவள்ளி பகுதியில் நடிகை அதுல்யா ரவி குடும்பத்துடன் வசித்து வருகிறார். காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். வடவள்ளி மருதம் சாலையில் உள்ள இவரது வீட்டில் கடந்த 4 மாதம் முன்பு பாஸ்போர்ட் மற்றும் 2000 ரூபாய் திருடு போனது.

இதனைத் தொடர்ந்து அதுல்யாவின் தாயார் விஜயலட்சுமி வடவள்ளி காவல் நிலையத்தில் திருட்டு சம்பவம் குறித்து புகார் அளித்தார் இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதே ரவி வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் இந்த திருட்டில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவரது தோழி சுபாஷினி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
தண்ணீரின்றி உயிர் வாழும் பாலைவன விலங்குகள் என்னென்ன?
உங்களைச் சுற்றி மகிழ்ச்சியான உறவுகளை உருவாக்குவது எப்படி?
மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அப்துல் கலாமின் பொன்மொழிகள்...!