National Film Awards : ரஹ்மான் முதல் நித்யா மேனன் வரை.. தேசிய விருதுகளை வென்ற கோலிவுட் படைப்புகள்.. முழு லிஸ்ட்
70th National Film Awards 2024 Full Winners List: நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கிய 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் 2 விருதுகளை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறந்த நடன இயக்குனருக்கான விருதை இப்படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்குதா பெண்ணே பெண்ணே' பாடலுக்கு கொரியாகிராஃப் செய்த ஜான் மாஸ்டர் மற்றும் சதீஷ் ஆகியோர் பெற்றுள்ளனர்.
70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முதல் நடிகை நித்யா மேனன் வரை மொத்தம் 6 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 70வது தேசிய திரைப்பட விருது இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, இசையமைப்பாளார், ஒளிப்பதிவாளர் உட்பட பல்வேறு விருதுகள் சிறந்த திரை கலைஞர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்த முறை 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த மொழி படங்களுக்கான முதலில் அறிவிக்கப்பட்டன. தமிழில் வெளியான ’பொன்னியின் செல்வன் 1’ பாகம் 4 தேசிய விருதுகளையும் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது தமிழ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில், தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் சற்று முன் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது.
இதில் நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கிய ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 2 விருதுகளை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறந்த நடன இயக்குனருக்கான விருதை இப்படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்குதா பெண்ணே பெண்ணே’ பாடலுக்கு கொரியாகிராஃப் செய்த ஜான் மாஸ்டர் மற்றும் சதீஷ் ஆகியோர் பெற்றுள்ளனர்.
Also read… பம்பாய் படத்தின் சாயிரா பானு… 90களை கலக்கிய மனிஷா கொய்ராலா குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!
பொன்னியின் செல்வன் திரைப்படம், தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்வை பெற்றது. உலக அளவில் 500 கோடிக்கு மேல் வசூலானது. இப்படத்தில், சியான் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும், திரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் ஊமை ராணி என இரண்டு விதமான ரோலில் நடித்திருந்தார்.
சிறந்த திரைப்படமாக பொன்னியன் செல்வன் முதல் பாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமானும், சிறந்த சவுண்ட் டிசைனருக்கான விருதை ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கும், சிறந்த ஒளிப்பதிவாளராக ரவிவர்மனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நான்கு விருதுகளும் பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்தது ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.