நடிகர் முகேஷ் மீதான பாலியல் வழக்கு… விசாரணைக்காக கேரளாவில் இருந்து சென்னை வந்த போலீஸ் குழு!
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிடப்பட்டது முதல் மலையாள திரைத்துறையினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழு அமைத்து வழக்குகளை பின் தொடர்கிறது கேரள அரசு. இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் முகேஷ் கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, முகேஷ் மற்றும் பிற நடிகர்கள் மீது அந்த நடிகை கொடுத்த தாக்குதல் புகாரை விசாரிக்க கேரளாவில் இருந்து போலீஸ் குழு தற்போது சென்னை வந்தடைந்தது.
நடிகர் முகேஷ் மீதான பாலியல் வழக்கை விசாரிப்பதற்காக கேரளாவில் இருந்து போலீஸ் குழு சென்னை வந்துள்ளது. கேரளா ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து ஒட்டுமொத்த்த தென் இந்திய திரைப்படத்துறையே ஆட்டம் கண்டுள்ளது என்று சொல்லலாம். கேரளா மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் அடுத்தடுத்து புகார்களை முன்வைத்து வருகின்றனர். இதுவரை நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக், இயக்குநர் ரஞ்சித் மற்றும் நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவர், ஜாமீன் கிடைத்ததை அடுத்து விடுவிக்கப்பட்டார். அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கேரளாவில் இருந்து போலிஸ் குழு தற்போது சென்னை வந்துள்ளது.
மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனின் ரிப்போர்ட் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. இதில் நடிகைகள் மற்றும் பெண்கள் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பல வித சிக்கல்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆய்வு செய்து, 2019 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவான நீதிபதி ஹேமா குழுவினர் அறிக்கையை சமர்பித்தனர்.
இந்த அறிக்கையின் நகல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. 235 பக்கம் கொண்ட அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சினிமாவில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு, சமரசம் செய்து கொண்டு இருக்க வேண்டும் என தங்களிடம் சொல்லப்பட்டதாக பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த கமிஷன் கடந்த 2019-ம் ஆண்டே அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இதற்கு மலையாள சினிமா உலகில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிட்டத்தட்ட 51 பேரின் வாக்குமூலத்தின்படி இந்த அறிக்கை தயாரானது. அதே சமயத்தில் மொத்த மலையாள திரையுலகமும் 15 ஆண் பிரபலங்களின் பிடியில் உள்ளது என்றும், பல நடிகைகள் ஓட்டலில் தனி அறையில் தங்கியிருக்க அஞ்சியதாகவும் கூறப்பட்டுள்ளது.
Also read… விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செய்த லப்பர் பந்து படக்குழு
இதையடுத்து பலரும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்தனர். இதனை விசாரணைக்கு கேரள அரசு சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) அமைத்தது. அந்த வகையில் நடிகரும், கொல்லம் தொகுதி சிபிஎம் சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
10 ஆண்டுகளுக்கு முன்னதாக திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பின் போது ஒரு பெண்ணிடம் முகேஷ் தவறாக நடந்துகொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கேரளா அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு மலையாள நடிகர் முகேஷை கைது செய்தது. கொல்லம் தொகுதியில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வாக உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக முகேஷ் ஏற்கனவே முன்ஜாமின் பெற்றிருந்தார். இதன் காரணமாக முகேஷ் கைது செய்யப்பட்டவுடன் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடரப்பட்ட தினம் முதல் முகேஷ் பதவி விலகவேண்டும் என எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
Also read… கோலிவுட் சினிமாவில் தீபாவளி ரேஸில் களமிறங்கும் 4 பெரிய படங்கள் – ஹிட் அடிக்கப்போவது யார்?
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிடப்பட்டது முதல் மலையாள திரைத்துறையினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழு அமைத்து வழக்குகளை பின் தொடர்கிறது கேரள அரசு. இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் முகேஷ் கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, முகேஷ் மற்றும் பிற நடிகர்கள் மீது அந்த நடிகை கொடுத்த தாக்குதல் புகாரை விசாரிக்க கேரளாவில் இருந்து போலீஸ் குழு தற்போது சென்னை வந்தடைந்தது.
’மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் அமைக்கப்படும் என்றும் பாலியல் தொல்லை கொடுப்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். நிச்சயம் யாராவது ஒரு பெண்ணை பயன்படுத்திக்கொள்ள பலர் முயற்சிப்பார்கள். இதை தவிர்க்க வேண்டுமென்றால், அந்த பெண்ணுக்கு மனதில் தைரியம் வேண்டும். அந்த பெண் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என முன்னதாக நடிகர் விஷால் தெரிவித்தார். அந்த வகையில் தென் இந்திய நடிகர் சங்கம் சார்பாக விசாகா கமிட்டி என்கிற குழு அமைக்கப்பட்டுள்ளது. நடிகை ரோகிணி இந்த அமைப்பிற்கு தலைமையாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.