வசூலில் கெத்து காட்டும் பகத் பாசிலின் ‘ஆவேசம்’… ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

Aavesham OTT Release : ஃபஹத் பாசில் நடித்த ஆவேசம் திரைப்பட பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இத்திரைப்படம் ஏப்ரல் 11-ம் தேதி தியேட்டரில் வெளியாகி வசூலை அள்ளியது. இந்நிலையில் தற்போது 100 கோடி வசூலில் இணைந்துள்ளது ஆவேஷம்.

வசூலில் கெத்து காட்டும் பகத் பாசிலின் ஆவேசம்... ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

ஆவேசம்

Updated On: 

28 Apr 2024 09:50 AM

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பகத் பாசில்.வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் என தமிழில் வெறும் 4 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் தனது அசாத்தியமான நடிப்பு திறமையால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார் பகத் பாசில். குறிப்பாக எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை கையாண்ட விதத்தால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் என மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக இருந்துவருகிறார் பகத். கண்களாலேயே ஒட்டுமொத்த உணர்வுகளை வெளிப்படுத்தி ஆச்சரியமளித்துவருகிறார். தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘ஆவேஷம்’ . இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஆசிஸ் வித்யார்தி, சஜின் கோபு,பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

Also read… மலையாளத்தில் மிஸ் செய்யக் கூடாத டாப் 10 த்ரில்லர் படங்கள்!

2024ம் ஆண்டு தொடங்கியது முதலே மலையாள திரைப்படங்கள் வசூலில் சாதனை படைத்து வருகின்றன. மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம் ஆகிய திரைப்படங்கள் 100 கோடி வசூல் லிஸ்டில் இணைந்து வரலாற்று சாதனை படைத்த நிலையில், அந்த வரிசையில் ஃபஹத் பாசில் நடித்த ஆவேசம் திரைப்பட பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இத்திரைப்படம் ஏப்ரல் 11-ம் தேதி தியேட்டரில் வெளியாகி வசூலை அள்ளியது. இந்நிலையில் தற்போது 100 கோடி வசூலில் இணைந்துள்ளது ஆவேஷம்.

இந்நிலையில், இப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஆவேஷம் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதில், இப்படம் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்