5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aavesham : கோலிவுட் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழில் வெளியாகும் ‘ஆவேசம்’ படம்!

Aavesham Tamil Ott: ஆவேசம் திரைப்படத்தை முழுக்க முழுக்க தன் தோளில் சுமந்து நடிப்பில் மிரட்டி விட்டார் பகத் பாசில். ரங்கண்ணனாக அவர் படத்தில் அட்டாகாசம் செய்துள்ளதை கொண்டாடவே திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. அத்துடன் பாக்ஸ் ஆபீஸிலும் இப்படம் வசூலை வெற்றிநடைப்போட்டது.

Aavesham : கோலிவுட் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழில் வெளியாகும் ‘ஆவேசம்’ படம்!
ஆவேசம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 19 Jun 2024 08:40 AM

பகத் பாசில் நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான ஆவேசம் திரைப்படத்தின் தமிழ் பதிப்பு ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 11, 2024 அன்று திரையரங்குகளில் வெளியானது ஆவேசம்.  அண்மையில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஆவேசம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துள்ள நிலையில், இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் மே மாதம் மலையாள மொழியில் வெளியாகியுள்ளது. கேரளா மற்றும் தென்னிந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக இந்தப் படம் ஓடியது. மலையாள சினிமா தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. நாளுக்கு நாள் புதிய மைல்கல்லை தொட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியான மலையாள திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.

இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சஜின் கோபு, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைக்க, சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரமயுகம், மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு என அடுத்தடுத்து வெளியான அனைத்து மலையாள திரைப்படங்களும் மலையாள ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது.  நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி அமோகமான வரவேற்பை பெற்று உலக அரங்கில் மலையாள சினிமா தனியிடத்தை பெற்றுள்ளது.

Also read… Top 10 Actress : இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்ட டாப் 10 தமிழ் நடிகைகள்!

தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோயின்களுக்கான முக்கியத்துவம் இல்லையென்றாலும், ஒரு பாட்டுக்காவது நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், ஆவேசம் திரைப்படத்தில் ஹீரோயின் இல்லாமல், வழக்கமான திரைப்படத்திற்கான அனைத்து பிம்பத்தையும் உடைத்து வெளியான ‘ஆவேசம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

ஆவேசம் திரைப்படத்தை முழுக்க முழுக்க தன் தோளில் சுமந்து நடிப்பில் மிரட்டி விட்டார் பகத் பாசில். ரங்கண்ணனாக அவர் படத்தில் அட்டாகாசம் செய்துள்ளதை கொண்டாடவே திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. அத்துடன் பாக்ஸ் ஆபீஸிலும் இப்படம் வசூலை வெற்றிநடைப்போட்டது.

இந்நிலையில் அமேசான் பிரைம், வரும் 21-ம் தேதி ‘ஆவேஷம்’ படத்தை தமிழில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தமிழ் பதிப்பிற்கு தேவையான தணிக்கையை படக்குழுவினர் ஏற்கனவே முடித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News