5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இது தல தீபாவளிதான்… விடாமுயற்சி குறித்து வெளியான தகவல் – ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்த படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் சமீபத்தில் வெளியானது. ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்ட அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மைத்ரீ மூவி மேக்கர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்றது. ஒரு மாதம் நடந்த அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் நிறைவடைந்தது.

இது தல தீபாவளிதான்… விடாமுயற்சி குறித்து வெளியான தகவல் – ரசிகர்கள் கொண்டாட்டம்
’விடாமுயற்சி’
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 27 Sep 2024 13:16 PM

நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக வைரலாகும் தகவல் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்குமார் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி என அடுத்தடுத்த இரு படங்களில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு அசர்பைஜானில் துவங்கப்பட்டு சில மாதங்கள் விறுவிறுப்பாக நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. படம் தீபாவளி ரிலீசுக்கு திட்டமிடப்பட்டு வருவதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். அதனை அஜித் ரசிகர்கள் ’தல’ தீபாவளி இந்த வருடம் என்று சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்த்தனர். சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

நடிகர் அஜித், துணிவு படத்துக்குப் பிறகு நடித்து வரும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு 70 முதல் 80 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடர்ந்து ஒரு மாத காலம் அசர்பைஜானில் நடத்தப்பட உள்ள நிலையில் கடந்த ஜூலை மாதம் இறுதியில் அஜித், அசர்பைஜான் புறப்பட்டு சென்றார். சமீபத்தில் அஜர்பைஜானில் நடந்துவந்த ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு தெரிவித்தது.

Also read… ரஜினி, தனுஷ் பட வில்லன் விநாயகன் கைது… என்ன காரணம்?

இந்நிலையில் இந்த படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் சமீபத்தில் வெளியானது. ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்ட அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மைத்ரீ மூவி மேக்கர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்றது. ஒரு மாதம் நடந்த அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் நிறைவடைந்தது.

தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் விடாமுயற்சி படத்தை கண்டிப்பாக வருகிற தீபாவளி அக்டோபர் 31ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளார்களாம். அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இதனால் ரசிகர்கள் இது ‘தல தீபாவளி’ என்று இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Latest News