Ajith Video: “சாதி, மதம்.. வெறுப்பை உண்டாக்கும்” வீடியோ வெளியிட்ட நடிகர் அஜித்! - Tamil News | Actor Ajith Urges People To Travel To Break Religious Barriers This Video Viral On Internet | TV9 Tamil

Ajith Video: “சாதி, மதம்.. வெறுப்பை உண்டாக்கும்” வீடியோ வெளியிட்ட நடிகர் அஜித்!

Updated On: 

05 Oct 2024 18:24 PM

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தான் நடிகர் அஜித். தமிழில் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவரின் நடிப்பில் தற்போது உருவாக்கி வரும் திரைப்படம் "விடாமுயற்சி". இப்படத்தின் படப்பிடிப்பானது முடிவடைந்த நிலையில் உலகம் சுற்றும் வாலிபனாகத் தனது பைக்கில் பல இடங்களைச் சுற்றி வருகிறார்.

Ajith Video: சாதி, மதம்.. வெறுப்பை உண்டாக்கும் வீடியோ வெளியிட்ட நடிகர் அஜித்!

நடிகர் அஜித்

Follow Us On

நடிகர் அஜித்தின் பைக் சுற்றுப்பயணம் மற்றும் கார் ரேஷிங் போன்ற வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாகுவது உண்டு. அதுபோல் தற்போது நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது உலகம் சுற்றும் வாலிபன் போலத் தனது பைக்கில் சுற்றி வருகிறார். நீண்டகாலத்திற்குப் பிறகு நடிகர் அஜித் தந்து பைக் சுற்றுப்பயணத்தைப் பற்றிப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தனது பைக் பயணத்தில் எவ்வாறு மக்களைப் பார்த்தேன் மற்றும் எவ்வாறு மக்கள் என்னிடம் நடந்துகொண்டனர் எனத் தனது வெளிநாடு பைக் சுற்றுப்பணத்தைப் பற்றி விரிவாகப் பேசி வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க :Today’s Cinema News: தளபதி 69 பூஜை முதல் ரஜினி அறிக்கை வரை… டாப் சினிமா செய்திகள்!

 

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் மற்றும் நடிகர் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் எனக் கூறப்படும் திரைப்படம் விடாமுயற்சி. இத்திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆர்வ உட்படப் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படமானது வரும் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் எழுந்த கடும் விமர்சனங்களுக்குப் பிறகு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த மாதத்தில் நிறைவடைந்துள்ளது.

இதையும் படிங்க :OTT Movies: இந்த வீக் எண்ட் மஜாதான்.. ஓடிடியில் மிஸ் பண்ணாம இந்த படங்களை பாருங்க!

இதைத்தொடர்ந்து தற்போது இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாக்க உள்ள திரைப்படமான “குட் பேட் அக்லி” என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில் இதற்கான ஆக்கப்பூர்வமான அறிவிப்பைப் படக்குழு கடந்த ஜூன் மாதத்தில் அறிவித்திருந்தது. இதையடுத்து தற்போது “குட் பேட் அக்லி” படத்தின் நடிப்பில் அஜித் கவனம் செலுத்தி வருகிறார் எனத் தகவல்கள் வெளியாகின. தற்போது அஜித் பைக்கிலிருந்து பேசும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :Vanitha Vijayakumar: மீண்டும் திருமணமா? ரகசியத்தை உடைத்த வனிதா விஜயகுமார்… இணையத்தில் பரவும் தகவல்

 

வைரலாகும் வீடியோ:

Being around my man you will start being a better person. His positive energy is infectious. You will empathise for everyone around you.
Let’s spread love and make this world a better place to live ❤️❤️#AK #AjithKumar #Thala pic.twitter.com/aEnNG0CO4e

— Aarav Kizar (@Aravoffl) October 5, 2024

 

நடிகர் அஜித் :

இந்த வீடியோவில் தனது பைக் பயணத்தில் தான் அனுபவித்த விஷயங்களைப் பகிர்ந்துள்ளார் அதில் “மதம் நீங்கள் இதுவரை சந்திக்காத மக்கள் மீது உங்களுக்கு வெறுப்பை தூண்டும் என்ற வாசகம் உள்ளது. இது உண்மை தான். மதம், சாதி எதுவாக இருந்தாலும் மனிதர்களை சந்திக்காத முன்பே அவர்கள் குறித்து தவறான மதிப்பீடுகளை நாம் செய்கிறோம்.  பல  மக்கள் இருந்தாலும், மொழிகளைத் தாண்டி  பயணம்  செய்வது மக்களை எளிதில் புரிந்து கொள்ள உதவுகிறது.

அதனால் பயணம் செய்யுங்கள். அது உங்களை வாழ்க்கையில் அற்புதமான மனிதனாக மாற்றும்” என இந்த வீடியோவில் நடிகர் அஜித் தனது பயணத்தைப் பற்றிய அற்புதமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த பதிவின் கீழ் அஜித் ரசிகர்கள் பலர் தங்களின் நெஞ்சார்ந்த கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க :15 வயதில் சினிமா.. தொடர் வெற்றி.. நடிகை அசின் சினிமா பயணம்!

குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version