பொங்கல் ரிலீசுக்கு தயாராகும் அஜித்தின் 2 படங்கள்… தலையிடுவாரா அஜித்?
முன்னதாக ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் அஜித்தின் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவது சிக்கலை ஏற்படுத்தும் என்று கோலிவுட் வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். நடிகர் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான படம் துணிவு. இந்தப் படம் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஒன்று மகிழ் திருமேனி இயக்கதில் விடாமுயற்சியும், ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அசர்பைஜானில் துவங்கப்பட்டு சில மாதங்கள் விறுவிறுப்பாக நடத்தப்பட்ட நிலையில் இடையில் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த படத்தின் பணிகளின் போதே அடுத்த படத்தில் கமிட்டானார் அஜித்.
அதன்படி இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் படத்தில் இணைந்த அஜித் படப்பிடிப்பு வேலைகளில் மும்முரமாக இறங்கினார். விடாமுயற்சி படம் வெளியீடு குறித்து எந்த அதிகாரப்பூர்வ தவலும் வெளியாக நிலையில் குட் பேட் அக்லி படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என முன்னதாகவெ தெரிவிக்கப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் விடாமுயற்சி திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகைக்கே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பணிகள் முடிவடையாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியான நிலையில் விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்து வந்தது.
ரசிகர்களின் வேதனையை புரிந்துகொண்ட படக்குழு தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் டீசரை கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி வெளியிட்டது. அதில் ”எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் படம் வருகின்ற 2025-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வரும் என்றும் அந்த டீசரில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் அஜித்தின் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவது சிக்கலை ஏற்படுத்தும் என்று கோலிவுட் வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.
இன்னும் இந்த இரண்டு படங்களுக்கும் அஜித் டப்பிங் பணியை தொடங்கவில்லை என்பதால் அவர் எந்தப் படத்தை முதலில் முடிப்பார் என்றும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகின்றது. மேலும் எந்தப் படம் முதலில் வெளியாகும் என்று அஜித் முடிவு செய்வில்லை என்றால் இரண்டு படக்குழுவினர் இடையே பிரச்னை ஏற்படும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.
Also read… புஷ்பா 2 படத்திற்காக ராஷ்மிகா செய்த செயல்… வைரலாகும் போட்டோஸ்
இந்த நிலையில் படப்பிடிப்பின் இடைவேளையில் நடிகர் அஜித் தனது கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். பல வருடங்களாக கார் ரேஸ் பந்தையத்தில் கலந்து கொள்ளாத நடிகர் அஜித்குமார் தற்போது மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அடுத்த ஆண்டு துபாயில் நடக்க உள்ள 24ஹெச் மற்றும் ஐரோப்பிய 24ஹெச் சாம்பியன்ஷிப் கார் ரேஸ் போட்டியில் அணி தலைவராகவும் ஓட்டுநராகவும் பங்கேற்கிறார் அஜித். அதன் பயிற்சியை இப்போது அவர் மேற்கொண்டுள்ளார். முன்னதாக அங்கு உள்ள பார்சிலோனா எஃப் 1 கார் ரேஸ் தளத்தில் தனது பெயர் கொண்ட காருடன் அஜித்குமார் நிற்கும் புகைப்படம் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலானது குறிப்பிடதக்கது.