விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? இணையத்தை கலக்கும் தகவல்
விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி வருகின்ற ஜனவரி 1-ம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகின்றது
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் வைரலாகி வருகின்றது. கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அஜித் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஒன்று மகிழ் திருமேனி இயக்கதில் விடாமுயற்சியும், ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் இறுதியாக நடித்தப் படம் ‘துணிவு’. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் அஜித்தின் தோற்றம் மற்றும் நடிப்பு ஆகியவை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
கடந்த 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குநர் மகிழ் திருமேனியுடன் கூட்டணி வைத்தார். ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைய தாமதம் ஆனதால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போனது.
Also read… Cinema Year Ender: 2024-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய மொழி படங்களின் லிஸ்ட் இதோ!
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அசர்பைஜானில் துவங்கப்பட்டு சில மாதங்கள் விறுவிறுப்பாக நடத்தப்பட்ட நிலையில் இடையில் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் விடாமுயற்சி திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகைக்கே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பணிகள் முடிவடையாத காரணத்தால் படம் வெளியாவதில் தாமதம் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. இந்த படத்தின் பணிகளின் போதே அடுத்த படத்தில் கமிட்டானார் அஜித்.
முன்னதாக விடாமுயற்சி படம் வெளியீடு குறித்து எந்த அதிகாரப்பூர்வ தவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் குட் பேட் அக்லி படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியான நிலையில் விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்து வந்தது.
Also read… தீவிர சினிமா ரசிகன் டூ எஸ்கே 25… ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்
ரசிகர்களின் வேதனையை புரிந்துகொண்ட படக்குழு தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் டீசரை கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி வெளியிட்டது. மேலும் படம் வருகின்ற 2025-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வரும் என்றும் அந்த டீசரில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அஜித் இந்தப் படத்திற்கான டப்பிங் பணியை முடித்தார்.
அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புகைப்படத்துடன் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி வருகின்ற ஜனவரி 1-ம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகின்றது.