குட் பேட் அக்லி படத்தின் புது லுக்கில் அஜித் – வைரலாகும் போட்டோ - Tamil News | Actor Ajithsr good bad ugly movie get up photo viral on social media | TV9 Tamil

குட் பேட் அக்லி படத்தின் புது லுக்கில் அஜித் – வைரலாகும் போட்டோ

அஜித் குமார், த்ரிஷா நடிப்பில் குட் பேட் அக்லி படம் உருவாகி வருகிறது. வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் குட் பேட் அக்லி படம் வெளியாக உள்ள நிலையில், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களிலும் பிசியாக அனைத்து வேலைகளையும் அஜித் பார்த்து வருகிறார்.

குட் பேட் அக்லி படத்தின் புது லுக்கில் அஜித் - வைரலாகும் போட்டோ

அஜித்

Published: 

07 Oct 2024 14:33 PM

குட் பேட் அக்லி படத்திலிருந்து நடிகர் அஜித் குமாரின் புது லுக் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நடிகர் அஜித், துணிவு படத்துக்குப் பிறகு நடித்து வரும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்கான பணிகளை படக்குழு செய்து வருகின்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்றுக் கொண்டிருந்த போதே அஜித் தனது அடுத்த படத்தில் கமிட்டானார். அஜித்தின் அந்த 63-வது படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயகுநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்குகிறார்.

‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்ட அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்கிறார். மைத்ரீ மூவி மேக்கர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்றது. ஒரு மாதம் நடந்த அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

Also read… சூப்பர் ஹிட் அடித்த மகாராஜா படம்… இயக்குநருக்கு கார் பரிசளித்த படக்குழு

அஜித் குமார், த்ரிஷா நடிப்பில் குட் பேட் அக்லி படம் உருவாகி வருகிறது. வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் குட் பேட் அக்லி படம் வெளியாக உள்ள நிலையில், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களிலும் பிசியாக அனைத்து வேலைகளையும் அஜித் பார்த்து வருகிறார்.

Also read… Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறப்போவது இவரா? இணையத்தில் கசிந்த தகவல்

‘குட் பேட் அக்லி’ படத்தின் ஃபர்ஸ்க் லுக்கில் அஜித்குமார் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மிரட்டியிருந்தார். இந்நிலையில் அஜித்குமார் சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடியுடன் பிளாக் பியர்டுடன் உள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்திற்காக அஜித்குமார் உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் இரண்டு கைகளிலும் வித்தியாசமான டாட்டு வரைந்துள்ளார். ‘குட் பேட் அக்லி’ படப்பிட்ப்பு 50 சதவிதம் முடிவடைந்துள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.

வேட்டையன் படம் ரிலீஸ் ஆனவுடனே அஜித்தின் விடாமுயற்சி படத்தை வெளியிடும் பணிகளை லைகா நிறுவனம் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலுக்கு குட் பேட் அக்லி வருவது உறுதியான நிலையில், டிசம்பர் மாதம் விடாமுயற்சி வெளியாகுமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குட் பேட் அக்லி படத்தின் கெட்டப்பில் அஜித்குமார் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இது மட்டுமின்றி ஷாலினி எடுத்த வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, வெளிநாட்டில் நடிகர் அஜித்துடன் அவரது மனைவி ஷாலினி வெளியில் சென்றபோது அவர் எடுத்த செல்ஃபி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட் இதோ!
ஹேப்பி பர்த்டே அக்‌ஷரா ஹாசன்...
பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்னேகா...!
மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
Exit mobile version