Allu Arjun: சிறையிலிருந்து விடுதலை.. அல்லு அர்ஜூன் எடுக்கப்போகும் முடிவு என்ன?
கடந்த 3 வருடங்களாக அல்லு அர்ஜூன் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் புஷ்பா 2 படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் அலைமோதினர். ஒரு மணி காட்சிக்கு மாலை முதலே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுக்க தொடங்கினர்.
புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 படம் வெளியானது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில், சுனில் குமார் உள்ளிட்ட பலரும் நடித்த இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரீலீலா ஆடியிருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த படத்திற்கு தமன் மற்றும் சாம்.சி.எஸ் பின்னணி இசையமைத்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா 2 படம் வெளியானது.
இந்த படம் ரிலீஸ் ஆன ஆறு நாட்களில் ரூ.1,000 கோடி வசூல் செய்து இந்திய சினிமாவில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. அதே சமயம் படம் ரிலீஸ் ஆன தினத்தில் மிகப்பெரிய சோக சம்பவமும் நடைபெற்றது.
நடந்தது என்ன?
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நள்ளிரவு ஒரு மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. மூன்று வருடங்களாக அல்லு அர்ஜூன் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் புஷ்பா 2 படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் அலைமோதினர். ஒரு மணி காட்சிக்கு மாலை முதலே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுக்க தொடங்கினர். இப்படியான நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள ஆர்டிசி கிராஸ் ரோட்டில் சந்தியா என்ற திரையரங்கம் உள்ளது.
Also Read: Crime: சென்னை வந்து ரூம் போட்டு நகைகள் திருட்டு.. திருச்சியில் சிக்கிய இளைஞர்
இந்தத் திரையரங்கில் நள்ளிரவு ஒரு மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்ட போது அங்கு அல்லு அர்ஜூன் திடீரென வருகை தந்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து அவரை காண முந்தியடித்தனர். இந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஆனால் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ் உயிருக்கு ஆபத்தான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டான். இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இனிமேல் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்தது.
அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு
எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் தியேட்டருக்கு வந்ததால் இந்த சம்பவம் நடைபெற்றதாக பலரும் குற்றம் சாட்டினர். அதே சமயம் தியேட்டர் நிர்வாகமும் எந்தவித தகவலும் தெரிவிக்காததால் சரியான அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருந்ததால் உயிரிழப்பு நேர்ந்ததாக சொல்லப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்த சம்பவத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வருத்தம் தெரிவித்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குவதாகவும் கூறியிருந்தார்.
Also Read: Elon Musk : ரூ.37 லட்சம் கோடியை தாண்டிய சொத்து மதிப்பு.. வரலாற்று சாதனை படைத்த எலான் மஸ்க்!
இதற்கிடையில் கூட்டணியில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தில் சந்தியா திரையரங்க உரிமையாளர் மேலாளர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். மேலும் அல்லு அர்ஜூன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று ஹைதராபாத் சிக்கடப்பள்ளி காவல் நிலைய அதிகாரிகள் அல்லு அர்ஜூன் வீட்டுக்கு வருகை தந்தனர். அடுத்த சில நிமிடங்களில் அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவ சோதனைக்காக அல்லு அர்ஜூன் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் நம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் அவர் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அல்லு அர்ஜூன் மீது சட்ட பிரிவு 105, 118(1) என்ற பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
சிறையிலிருந்து விடுதலை
இதற்கு இடையில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு நடிகை ராஷ்மிகா மந்த்னா, நடிகர் நானி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். நடந்த சம்பவம் அது எதிர்பாராத விபத்து என்றாலும் அதற்காக ஒருவர் மீது அனைத்து குற்றச்சாட்டுகளையும் திணிக்க கூடாது என கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் தெலங்கானா உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில் பிணைத்தொகையாக 50000 சிறை கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அல்லு அர்ஜுன் அரசியலுக்கு வரப்போவதாக ஒரு தகவல் வெளியான நினைவில் அதனை அவர் தரப்பு திட்டவட்டமாக மறுத்தது. ஆனால் தற்போது அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்த நிலையில் இதன் பின்னணி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக கூட இருக்கலாம் என சொல்லப்படுகிறது.