ப்ரீ புக்கிங் கலெக்ஷனில் கல்லாகட்டும் புஷ்பா 2… இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?
படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்புல் நாளை 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள புஷ்பா 2 தி ரூல் படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். கூலித் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கும் அல்லு அர்ஜுனின் புஷ்பா கதாபாத்திரம் எப்படி ஒரு கடத்தல் கும்பலுக்கே தலைவனாக மாறுகிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன். ஆரம்பத்திலேயே படம் நேரடியாக மையத்துக்குள் பயணிக்கத் தொடங்கி விடுகிறது. வேலை செய்ததுக்கு கூலி வாங்கும்போது கூலித் தொழிலாளியான புஷ்பா கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் காட்சியிலேயே அந்த கதாப்பாத்திரத்தின் இயல்பு நமக்குச் சொல்லப்பட்டு விடுகிறது.
அதற்கு அடுத்தடுத்த காட்சிகளில் இருந்தது படத்தின் இடைவேளை வரை எங்கும் நிற்காமல் செல்லும். வழக்கமான ‘டான்’, ‘கேங்ஸ்டர்’ படங்களில் பார்த்த அதே கதைதான் என்றாலும் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பும் மேனரிசமும் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தது. வட மாநிலங்களில் இந்தப் படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.
அதுமட்டும் இன்றி சுமார் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் பட்டி தொட்டி எங்கும் அதிர்ந்தது. சமந்தா, ஓ சொல்றியா பாடலுக்கு மட்டும் வந்து ஓ சொல்லிவிட்டுப் போகிறார். படத்தின் இரண்டாம் பாதியில் பகத் பாசில் வருகிறார். அது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் துவக்கப் புள்ளியாக அமைகிறது.
ஃபஹத் பாசில் என்ன செய்யப் போகிறார் என்பதை இரண்டாம் பாகம் வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்தப் படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. ‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதன் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் இடையே நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் சுகுமார் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதனை சரிசெய்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கினார்கள். இந்த நிலையில் நடிகர் ஃபகத் பாசிலிடம் வாங்கிய தேதிகளை சரியாக பயன்படுத்தவில்லை என்பதால் அவரும் மற்ற படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கினார்.
Also read… கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய ஆசைப்பட்ட பிரபல நடிகர்… இணையத்தில் வைரலாகும் தகவல்
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான டீசரில், தெலங்கானாவில் பழங்குடி மக்களின் திருவிழாவான ‘ஜடாரா’வுடன் டீசர் தொடங்குகிறது. காதில் தோடு, காலில் சலங்கை, கழுத்தில் மாலை, ஆபரணங்களுடன் சேலை அணிந்து வித்தியாசமான மேக்கப் அப்புடன் புதுவித தோற்றத்தில் காட்சியளிக்கிறார் அல்லு அர்ஜூன்.
இதனை தொடர்ந்து படத்தின் இரண்டு பாடல்கள் இணையத்தில் வெளியானது. ‘புஷ்பா புஷ்பா’ என்ற பாடலும் ‘சூசெகி’ என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. படம் முன்னதாக ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் டிசம்பருக்கு ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.
Also read… பொங்கல் ரிலீசுக்கு தயாராகும் அஜித்தின் 2 படங்கள்… தலையிடுவாரா அஜித்?
இந்த நிலையில் படம் நாளை டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை கடந்த மாதம் 17-ம் தேதி படக்குழு வெளியிட்டது. முதல் பாகத்தில் கூலி தொழிலாளியாக இருந்த அல்லூ அர்ஜூன் இரண்டாம் பாகத்தில் பெரிய கடத்தல் மன்னனாக காட்சியளிக்கிறார். அனல் பறக்கும் காட்சிகளுடன் வெளியானது.
இந்த நிலையில் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது. அது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் படம் ப்ரீ புக்கிங்கில் தற்போது வரை 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.