9 நாட்களில் புஷ்பா 2 படம் வசூலித்தது எவ்வளவு? வெளியானது தகவல்
படம் வெளியாகி 9 நாட்களை கடந்துள்ள நிலையில் படத்தின் இதுவரையிலான வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி படம் இதுவரை உலக அளவில் 1067 கோடிகள் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜு நடிப்பில் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் 9 நாட்களை கடந்த நிலையில் படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் கூலித் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கும் நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா கதாபாத்திரம் எப்படி ஒரு கடத்தல் கும்பலுக்கே தலைவனாக மாறுகிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன். ஆரம்பத்திலேயே படம் நேரடியாக மையத்துக்குள் பயணிக்கத் தொடங்கி விடுகிறது. வேலை செய்ததுக்கு கூலி வாங்கும்போதே கூலித் தொழிலாளியான புஷ்பா கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் காட்சி அந்த கதாப்பாத்திரத்தின் இயல்பு பார்வையாளர்களுக்கு சொல்லப்பட்டு விடுகிறது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார்.
படத்தின் இடைவேளை வரை எங்கும் நிற்காமல் செல்லும். வழக்கமான ‘டான்’, ‘கேங்ஸ்டர்’ படங்களில் பார்த்த அதே கதைதான் என்றாலும் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பும் மேனரிசமும் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தது. வட மாநிலங்களில் இந்தப் படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.
ஆரம்பத்திலேயே படம் நேரடியாக மையத்துக்குள் பயணிக்கத் தொடங்கி விடுகிறது. வேலை செய்ததுக்கு கூலி வாங்கும்போது கூலித் தொழிலாளியான புஷ்பா கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் காட்சியிலேயே அந்த கதாப்பாத்திரத்தின் இயல்பு நமக்குச் சொல்லப்பட்டு விடுகிறது.
சமந்தாவின் நடனத்தில் வெளியான ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் பட்டி தொட்டி எங்கும் அதிர்ந்தது. சமந்தா, ஓ சொல்றியா பாடலுக்கு மட்டும் வந்து ஓ சொல்லிவிட்டுப் போகிறார். படத்தின் இரண்டாம் பாதியில் பகத் பாசில் வருகிறார். அது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் துவக்கப் புள்ளியாக அமைகிறது.
Also read… Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? இணையத்தில் கசிந்த தகவல்
பகத் பாசில் என்ன செய்யப் போகிறார் என்பதை இரண்டாம் பாகம் வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று இருந்தது. இந்தப் படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி ‘புஷ்பா 2 தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படத்தில் நடிகர்களின் நடிப்பு மிகையாக உள்ளது என்றும் சில காட்சிகள் வழிந்து திணிக்கப்பட்டுள்ளது என்றும் படம் பார்த்தவர்கள் விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்னர் ப்ரீ புக்கிங்கிலேயே 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியானது.
Also read… Kollywood Year Ender: 2024-ம் ஆண்டு ரசிகர்களை பெரிதும் கவராத படங்களின் லிஸ்ட் இதோ!
முதல் பாகத்தில் கூலி தொழிலாளியாக இருந்த அல்லு அர்ஜூன் இரண்டாம் பாகத்தில் பெரிய கடத்தல் மன்னனாக காட்சியளிக்கிறார். அனல் பறக்கும் காட்சிகளுடன் திரையரங்குகளில் படம் வெளியானது. சுமார் 3 மணி நேரம் 25 நிமிடங்களை கொண்ட இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் கலவையான விமர்சனத்தை கூறுகின்றனர். சிலர் நீலம் அதிகம் என்கிறார்கள். சிலர் சீரியல் போல உள்ளது என்கிறார்கள்.
View this post on Instagram
இந்த நிலையில் படம் வெளியாகி 9 நாட்களை கடந்துள்ள நிலையில் படத்தின் இதுவரையிலான வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி படம் இதுவரை உலக அளவில் 1067 கோடிகள் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வார முடிவில் இவ்வளவு வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற சாதனையைப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.