5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

டிசம்பரில் வெளியாகிறது அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2 தி ரூல்’… படக்குழு வெளியிட்ட அப்டேட்

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். கூலித் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கும் புஷ்பா கதாபாத்திரம் எப்படி ஒரு கடத்தல் கும்பல் […]

டிசம்பரில் வெளியாகிறது அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2 தி ரூல்’… படக்குழு வெளியிட்ட அப்டேட்
புஷ்பா 2 தி ரூல்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Oct 2024 17:56 PM

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். கூலித் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கும் புஷ்பா கதாபாத்திரம் எப்படி ஒரு கடத்தல் கும்பல் தலைவனாகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். ஆரம்பத்திலேயே படம் நேரடியாக மையத்துக்குள் பயணிக்கத் தொடங்கி விடுகிறது. செய்த வேலைக்கு கூலி வாங்கும்போது கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் காட்சியிலேயே புஷ்பாவின் இயல்பு நமக்குச் சொல்லப்பட்டு விடுகிறது. அதற்கு அடுத்தடுத்த காட்சிகளிலிருந்தே படம் இடைவேளை வரை எங்கும் நிற்காமல் செல்கிறது. வழக்கமான ‘டான்’, ‘கேங்ஸ்டர்’ படங்களில் பார்த்த அதே கதைதான்.

வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் பட்டி தொட்டி எங்கும் அதிர்ந்தது. சமந்தா, ஓ சொல்றியா பாடலுக்கு மட்டும் வந்து ஓ சொல்லிவிட்டுப் போகிறார். படத்தின் இரண்டாம் பாதியில் பகத் பாஸில் வருகிறார். அது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் துவக்கப் புள்ளியாக அமைகிறது. அவர் என்ன செய்யவிருக்கிறார் என்பதை இரண்டாம் பாகம் வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகியுள்ளது. ‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதன் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் இடையே அல்லு அர்ஜுன் – சுகுமார் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனை சரிசெய்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கினார்கள். மேலும், ஃபகத் பாசிலிடம் வாங்கிய தேதிகள் சரியாக உபயோகிக்கப்படவில்லை என்பதால் அவரும் இதர படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான டீசரில், தெலங்கானாவில் பழங்குடி மக்களின் திருவிழாவான ‘ஜடாரா’வுடன் டீசர் தொடங்குகிறது. காதில் தோடு, காலில் சலங்கை, கழுத்தில் மாலை, ஆபரணங்களுடன் சேலை அணிந்து வித்தியாசமான மேக்கப் அப்புடன் புதுவித தோற்றத்தில் காட்சியளிக்கிறார் அல்லு அர்ஜூன். இது இணையத்தில் அதிகமாக பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் இரண்டு பாடல்கள் இணையத்தில் வெளியானது. ‘புஷ்பா புஷ்பா’ என்ற பாடலும் ‘சூசெகி’ என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

Also read… வேட்டையன் படத்தில் ஃபகத் பாசில் நடிப்பு குறித்து பேசிய ரஜினி!

இந்நிலையில், இப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மெல்போர்னில் நடைபெற்றது. அங்கே டேவிட் வார்னர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் டிசம்பருக்கு ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக டிசம்பர் 6-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு முடிவடையவில்லை. இறுதிகட்டப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் படக்குழு மீண்டும் ரிலீஸ் தேதியை உறுதி செய்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது அல்லு அர்ஜுன் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest News