தவறுதலாக தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட இந்தி நடிகர்.. என்ன நடந்தது?
நடிகர் கோவிந்தா கொல்கத்தா செல்லத் தயாரான போது தன்னிடம் உள்ள லைசென்ஸ் துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்தில் அவர் காயமடைந்தது. தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதில் அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் மளமளவென கொட்டியது. இதையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
நடிகரும், சிவசேனா தலைவருமான கோவிந்தாவுக்கு மும்பையில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை தவறுதலாக தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட் திரைப்படங்களில் பிரேக் டான்ஸ் ஆடி புகழ்பெற்றவர் நடிகர் கோவிந்தா (61). கடந்த 1980-ம் ஆண்டு முதல் இவர் 165 திரைப்படங்களில் நடித்துள்ளார். மும்பை போலீஸ் அதிகாரி வெளியிட்ட தகவலின்படி, கோவிந்தா இன்று காலை கொல்கத்தாவிற்கு வேலை நிமித்தமாக கிளம்பிய போது தன்னிடம் உள்ள லைசென்ஸ் துப்பாக்கியை பரிசோதனை செய்துள்ளார். அப்போது தவறுதலாக நடிகர் கோவிந்தாவின் கால் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. உடனடியாக சிகிச்சை பெற அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
Also read… ”என் மௌனம் பலவீனமோ குற்றவுணர்ச்சியோ அல்ல” – ஆர்த்தி ரவி வேதனை
கோவிந்தாவின் மேலாளர் ஷஷி சின்ஹா செய்தியாளர்களிடம் பேசியபோது, நடிகர் கோவிந்தா கொல்கத்தா செல்லத் தயாரான போது தன்னிடம் உள்ள லைசென்ஸ் துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்தில் அவர் காயமடைந்தது. தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதில் அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் மளமளவென கொட்டியது. இதையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர் துப்பாக்கி குண்டை அகற்றிவிட்டனர். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கோவிந்தா விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.