Actor Cheran: நடுரோட்டில் சண்டைபோட்ட சேரன்.. காதை கிழித்த ஹார்ன் சவுண்ட்டால் வாக்குவாதம்!
Viral Video: “சாலையில் மெதுவாகத்தான் வந்தால் என்ன?, இத்தனை பயணிகள் வருகிறார்களே அவர்களின் உயிர் முக்கியம் இல்லையா?, அனைவரும் இதே குறுகிய சாலையில் தான் செய்ய வேண்டும். இப்படி ஹாரன் அடித்தால் எப்படி?’ என சேரன் கேள்வி மேல் கேள்வி எழுப்பினார். இதற்கு ஓட்டுநரால் பதில் சொல்லவே முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் சேரன்: தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் சேரன். இவர் நேற்று கடலூர் அருகே தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரிக்கு மாநிலத்துக்கு கடலூர் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியகங்கனாகுப்பம் பகுதி அருகே செல்லும்போது பின்னால் வந்த தனியார் பேருந்து அதிக ஒலி எழுப்பி வேகமாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஹாரன் அடிக்கப்பட்ட அந்த பேருந்தின் ஒலி சேரனை கடுமையாக டென்ஷனாக்கியுள்ளது. இதனால் பேருந்து வழிவிட இடம் விட்டும் பேருந்தால் செல்ல முடியாத நிலை இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் தொடர்ச்சியாக ஹாரன் அடித்துள்ளார். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த சேரன், காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு சாலையில் இறங்கினார். பின்னால் வந்த பேருந்தை நிறுத்தி ஓட்டுநரை சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
“சாலையில் மெதுவாகத்தான் வந்தால் என்ன?, இத்தனை பயணிகள் வருகிறார்களே அவர்களின் உயிர் முக்கியம் இல்லையா?, அனைவரும் இதே குறுகிய சாலையில் தான் செய்ய வேண்டும். இப்படி ஹாரன் அடித்தால் எப்படி?’ என கேள்வி மேல் கேள்வி எழுப்பினார். இதற்கு ஓட்டுநரால் பதில் சொல்லவே முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. பலரும் இப்படி அடாவடி செயல்களில் ஈடுபடும் தனியார் பேருந்து ஊழியர்களின் செயலுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதேசமயம் தனக்கென என ஒதுங்கி போகாமல் தப்பை சரியாக தட்டிக்கேட்ட சேரனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு நாள்தோறும் காலையில் இருந்து இரவு வரை ஏராளமான தனியார் பேருந்துகள் செல்கின்றது. 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் இப்பேருந்துகள் நேரக் கட்டுப்பாடு காரணமாக அதிவேகமாக சாலைகளில் செல்வதோடு அதிகமாக ஒலி எழுப்பி சாலையில் செல்பவர்களையும் பயமுறுத்துகின்றனர். இதுதொடர்பாக வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் பலமுறை நடவடிக்கை, அபராதம் ஆகியவை விதிக்கப்பட்டாலும் இந்த சம்பவங்கள் குறைந்தபாடில்லை. எனவே இதற்கு விரைந்து தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பலரும் தெரிவித்துள்ளனர்.
சேரனும் தமிழ் சினிமாவும்
பாரதி கண்ணம்மா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சேரன். இவர் இயக்கிய வெற்றிக்கொடிக்கட்டு, தேசிய கீதம், பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, நடிகராகவும் தன்னை மக்களிடம் கொண்டு சேர்த்த சேரன் மீண்டும் திரைத்துறையில் வெற்றிகரமான நபராக வர வேண்டும் என்பதே அனைவரது எண்ணமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.