”இது எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி”… நித்யா மேனனுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ் - Tamil News | Actor Dhanush congratulates Nithya Menen team on National Award wins | TV9 Tamil

”இது எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி”… நித்யா மேனனுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்

Published: 

17 Aug 2024 13:06 PM

Actor Dhanush: படத்தில் வரும் ஹீரோவின் பெயரையே படத்தின் டைடிலாகவே வைத்து விட்டனர். ஒரு சாதாரண உணவு டெலிவரி செய்யும் மனிதனின் வாழ்வில் நடக்கும் காதல்-மோதல்-பாசம் மிகுந்த கதைதான் திருச்சிற்றம்பலம். இந்தப் படம் தற்போது சன் நெக்ஸ்ட் மற்றும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளங்களில் காணக் கிடைக்கின்றது.

”இது எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி”... நித்யா மேனனுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்

நித்யா மேனனுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்

Follow Us On

திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைகான விருது அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகர் தனுஷ் போட்ட எக்ஸ் தள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.  70-வது தேசிய திரைப்பட விருது நேற்று அறிவிக்கப்பட்டது. மத்திய‌ அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, இசையமைப்பாளார், ஒளிப்பதிவாளர் உட்பட பல்வேறு விருதுகள் சிறந்த திரை கலைஞர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்த முறை 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு வருடமும் இந்தியாவில், தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹரின் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இதில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியிருந்தது. அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியதோடு, பாக்ஸ் ஆபிஸில் வசூலையும் குவித்தது. படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருந்தார். ‘திருச்சிற்றம்பலம்’ பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக ‘மேகம் கருக்காதா’ பாடல் வீடியோ தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலுக்கு பட்டி தொட்டி எங்கும் ரீல்ஸ்கள் எடுத்து குவித்தனர் ரசிகர்கள்.

படத்தில் வரும் ஹீரோவின் பெயரையே படத்தின் டைடிலாகவே வைத்து விட்டனர். ஒரு சாதாரண உணவு டெலிவரி செய்யும் மனிதனின் வாழ்வில் நடக்கும் காதல்-மோதல்-பாசம் மிகுந்த கதைதான் திருச்சிற்றம்பலம். இந்தப் படம் தற்போது சன் நெக்ஸ்ட் மற்றும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளங்களில் காணக் கிடைக்கின்றது.

Also read… இயக்குநர் ஷங்கர் பிரமாண்ட இயக்குநர் ஆனது எப்படி? சில சுவாரஸ்ய தகவல்கள்

இந்த நிலையில் நேற்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில்  ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 2 விருதுகளை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறந்த நடன இயக்குனருக்கான விருதை இப்படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்குதா பெண்ணே பெண்ணே’ பாடலுக்கு கொரியாகிராஃப் செய்த ஜான் மாஸ்டர் மற்றும் சதீஷ் ஆகியோர் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நித்யா மேனன் தேசிய விருதை பெற்றது தனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி என்று தனுஷ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதேபோல படத்தில் நடனம் அமைத்து தேசிய விருதை பெற்றுள்ள ஜானி மற்றும் சதீஷ் மாஸ்டர்களுக்கும் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருச்சிற்றம்பலம் டீமிற்கு இன்றைய தினம் மிகச்சிறப்பான நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தூங்குவதற்கு முன் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்
நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
நெல்லிக்கனி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
Exit mobile version