5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நடிகை நயன்தாரா மீது தனுஷ் உரிமையியல் வழக்கு.. பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

கடந்த இரண்டு வருடங்களாக வெளியாக நிலையில், 18 ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நயன்தாரா தனுஷிற்கு ஒரு ஓப்பன் லெட்டர் வெளியிட்டு இருந்தார். அதில் தனது ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் என்ற படத்தில் இருந்து காட்சிகள் பயன்படுத்த தடையில்லா சான்றிதழை கடந்த இரண்டு வருடங்களாக கோரி வருவதாகவும், ஆனால் தனுஷ் தரப்பில் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நடிகை நயன்தாரா மீது தனுஷ் உரிமையியல் வழக்கு.. பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Nov 2024 13:00 PM

நடிகை நயன்தாராவுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வொண்டார் பார் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. மேலும் இந்த மனு மீது நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனது திருமணம் குறித்த ஆவணப் படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக வழக்கு தொடர்ப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ஆவனப்படமான, ‘ நயன்தாரா பியாண்ட் தி பேரிடேல்’ எனும் படம் அன்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

கடந்த இரண்டு வருடங்களாக வெளியாக நிலையில், 18 ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நயன்தாரா தனுஷிற்கு ஒரு ஓப்பன் லெட்டர் வெளியிட்டு இருந்தார். அதில் தனது ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் என்ற படத்தில் இருந்து காட்சிகள் பயன்படுத்த தடையில்லா சான்றிதழை கடந்த இரண்டு வருடங்களாக கோரி வருவதாகவும், ஆனால் தனுஷ் தரப்பில் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், படத்திற்கு எதிரான உங்கள் பழிவாங்கும் எண்ணம் என்னையும் எனது கணவரை மட்டும் பாதிக்கவில்லை, இந்த படத்திற்காக தங்கள் முயற்சியையும் நேரத்தையும் கொடுத்த அனைவரையும் பாதிக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க: கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா – ஜோதிகா

இந்த கடிதம் சினிமா வட்டாரங்களில் பெரும் புயலை கிளப்பியது. நயன்தாராவின் இந்த கடிதத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஒரு சிலர் இதற்கு எதிர்மறையான கருத்துக்களையும் முன்வைத்தனர். இருப்பினும் இந்த காட்சிகள் தனது ஆவணப்படத்தில் இடம்பெறும் எனவும், தனுஷின் இந்த பழிவாங்கும் செயல் திருத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படம் வெளியாகி சில நாட்கள் ஆகியும் நடிகர் தனுஷ் தரப்பில் எந்த பதிலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் நடிகை நயன்தாராவுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Latest News