Dhanush: தனுஷின் ’ராயன்’ ரிலீஸ் எப்போ? வெளியானது புது அப்டேட் - Tamil News | Actor dhanush starrer Raayan movie will hit theatre on july 26th | TV9 Tamil

Dhanush: தனுஷின் ’ராயன்’ ரிலீஸ் எப்போ? வெளியானது புது அப்டேட்

Published: 

11 Jun 2024 10:09 AM

Raayan Movie Release Date: தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் இதற்க்கு முன்பு எந்த படத்திலும், நடித்திரான கெட்டப்பான மொட்டை தலையுடன் நடித்துள்ளார்.

Dhanush: தனுஷின் ’ராயன்’ ரிலீஸ் எப்போ? வெளியானது புது அப்டேட்

ராயன்

Follow Us On

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படம் வரும் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார். ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நீண்ட காலங்கள் அவர் படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தாமல் இருந்த சூழலில் தற்போது மீண்டும் ராயன் படத்தின் மூலம் தனது இயக்குநர் வேலையை தொடங்கியுள்ளார் தனுஷ். தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் இதற்க்கு முன்பு எந்த படத்திலும், நடித்திரான கெட்டப்பான மொட்டை தலையுடன் நடித்துள்ளார்.

Also read… ”இப்போ வெளிச்சம் வர நேரம் வந்துருச்சு” – ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் ட்ரெய்லர்

, இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் மற்றும் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் தொடர்ந்து வெளியாகி வருகிறது. முன்னதாக இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான, அடங்காத அசுரன் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை தனுஷே எழுதி, ஏ.ஆர். ரகுமானுடன் சேர்ந்து அவர் இசையில் பாடி இருந்தார். அதனைத் தொடர்ந்து ’வாட்டர் பாக்கெட்’ என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

வடசென்னையை மையமாகக் கொண்டு இந்த படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்த படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட சூழலில் ஜூன் மாதத்திற்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் ஜூலை மாதத்திற்கு ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில், இப்படம் வரும் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version