5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பஞ்சாயத்து ஓவர்… நடிகர் சங்கத்தினருக்கு நன்றி தெரிவித்த தனுஷ்!

தங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்காக திரு. நாசர் அவர்கள், திரு. கார்த்தி, திரு. விஷால், திரு. கருணாஸ் மற்றும் திரு. பூச்சி முருகன் ஆகியோருக்கு நான் சிறப்பு நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்தப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எங்களுக்கு உதவியது மட்டுமல்லாமல் தொழில்துறைக்கு ஒரு நேர்மையான முன்னுதாரணத்தையும் அமைத்துள்ளது.

பஞ்சாயத்து ஓவர்… நடிகர் சங்கத்தினருக்கு நன்றி தெரிவித்த தனுஷ்!
தனுஷ்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Sep 2024 16:39 PM

நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என கடந்த ஜூலை மாதத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சர்ச்சையை கிழப்பிய நிலையில் இந்த பிரச்னையை நடிகர் சங்கம் பேசி தீர்த்து வைத்துள்ளது. இதற்கு தனுஷ் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டம் கடந்த ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்றது. அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தலைமையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 6 முக்கிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் தனுஷ் குறித்த அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியது.

நடிகர் தனுஷ் அவர்கள் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

மேலும் நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம், மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருப்பதால், அதை முறைப்படுத்த பல்வேறு முயற்சி செய்து தமிழ் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டியுள்ளது. அதனால், வருகின்ற 01.11.2024 முதல் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான வேலைகளையும் நிறுத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தென்னிந்திய நடிகர் சங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து நாசர் தலைமையில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இருதரப்பு இடையிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஸ்டிரைக் வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்தது.

Also read… Cinema Rewind: ’குஷி’ படத்தில் நடிக்க இதுதான் காரணம்… நடிகர் விஜய் சொன்ன விஷயம்

இந்த நிலையில் இந்த விவாகரம் தொடர்பாக தயாரிப்பாளர்களுடனான பிரச்னையை தீர்க்க உதவிய நடிகர் சங்கத்திற்கு, நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “எனது தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் (திரு முரளி அவர்கள்) மற்றும் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் (திரு கதிரேசன் அவர்கள்) எழுப்பிய புகார்களை தீர்க்க உதவிய நம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் சரியான தலையீடு மற்றும் நேர்மையான வழிகாட்டுதல் எங்களை நோக்கிய சவால்களை சமாளிக்கவும் பரஸ்பர நன்மை பயக்கும் உடன்பாட்டை அடையும் எங்களுக்கு உதவியது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பயன் அளிக்கும் ஒரு தீர்வை கண்டுபிடிப்பதில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளை நான் குறிப்பாக அங்கீகரிக்க விரும்புகிறேன்.

உங்கள் முயற்சிக்கு என் ஆழ்ந்த நன்றிகள் தங்கள் உதவிப் பொருட்டு 11/09/2024 அன்று எங்கள் படப்பிடிப்பை மீண்டும் நல்லவிதமாக தொடங்க முடிந்தது. தங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்காக திரு. நாசர் அவர்கள், திரு. கார்த்தி, திரு. விஷால், திரு. கருணாஸ் மற்றும் திரு. பூச்சி முருகன் ஆகியோருக்கு நான் சிறப்பு நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்தப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எங்களுக்கு உதவியது மட்டுமல்லாமல் தொழில்துறைக்கு ஒரு நேர்மையான முன்னுதாரணத்தையும் அமைத்துள்ளது. நம் நடிகர் சங்கம் முயற்சித்து வரும் பல சிறந்த திட்டங்களுக்கும் முன்னெடுப்புகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என நடிகர் தனுஷ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Latest News