அமரன் வசூலை ஈடுகட்டும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்.. வசூல் எவ்வளவு தெரியுமா?

Lucky Baskhar Box Office Collection : தீபாவளியை ஒட்டி வெளியானது லக்கி பாஸ்கர். பிரபல நடிகர் சல்மான் கான் நடிப்பில் தெலுங்கு மொழியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தைப் பிரபல இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான இப்படம், தற்போது அமரன் திரைப்படத்தின் வசூலை ஈடு செய்யும் விதத்தில் திரையரங்குகளில் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது.

அமரன் வசூலை ஈடுகட்டும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்.. வசூல் எவ்வளவு தெரியுமா?

லக்கி பாஸ்கர்

Updated On: 

09 Nov 2024 22:16 PM

தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகனான இவர் மலையாள திரைப்படங்களின் பிரபலத்தை அடுத்து தமிழ், தெலுங்கு மாற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவரின் முன்னணி நடிப்பில் வெளியான திரைப்படம் “லக்கி பாஸ்கர்”. முற்றிலும் தெலுங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு வெளியான இத்திரைப்படத்தைப் பிரபல இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். துல்கர் சல்மானின் 32வது திரைப்படமான இதில் இவருக்கு ஜோடியாக “கோட்” திரைப்பட பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற 4க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தின் வசூலை ஈடுகட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க :Amaran OTT Release: சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

நடிகர் துல்கர் சல்மான் வெறும் நடிகர் மட்டுமல்ல இவர் சிறந்த பின்னணி பாடகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி எனப் பல மொழித் திரைப்படங்களில் பிரபலமாகிவரும் இவர் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன் துபாயில் பிரபல வணிக நிறுவனத்தின் ‘சேல்ஸ் மேனேஜராக’ இருந்துள்ளார். பின் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் இயக்குநர் பெரி ஜானிடம் நடிப்பிற்காக மூன்று மாதம் வரை பயிற்சி பெற்றுள்ளாராம். சினிமாவின் நுழைவதற்காக பல இன்னல்களைக் கடந்து இவர் நடிகராக அறிமுகமாகிய முதல் திரைப்படம் “செகண்ட் ஷோ”. 2012ல் பிரபல மலையாள இயக்குநர் இயக்கத்தில் வெளியான க்ரைம் திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமாகினார்.

இதையும் படிங்க :Dhanush: இட்லி கடை ரிலீஸ் தேதி அறிவிப்பு – தனுஷூக்கு கைகொடுக்குமா ஏப்ரல்?

இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் பல திரைப்படங்களை நடித்துவந்த இவர் 2014ம் ஆண்டு இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் “வெளியான வாயை மூடி பேசவும்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். பல பெண்களின் க்ராஸ் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கும் இவருக்குத் தமிழ் மட்டுமில்லை ஆள் ஓவர் இந்தியா அளவிலும் ரசிகர்கள் கூடினர். இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் நடிக வாய்ப்புகள் கிடைத்தது தொடர்ந்து கர்வான், சோயா காரணி ,சுப் போன்ற இந்தி திரைப்படங்களிலும் நடித்தார். பல தென்னிந்தியத் திரைப்படங்களில் பிரபலமான நடிகராக வலம்வரும் இவரின் நடிப்பில் தற்போது வெளியான திரைப்படம் லக்கி பாஸ்கர்.

இதையும் படிங்க :’ NGK படத்தில் நடிக்கவே முடியல’ நடிகை சாய் பல்லவி சொன்ன விஷயம்..!

 

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமா மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்த திரைப்படம் “லக்கி பாஸ்கர்” . நடிகர் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி , ஆயிஷா கான் , ஹைப்பர் ஆதி மற்றும் பி. சாய் குமார் ஆகிய பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு தமிழில் அமரன், பிரதர், மற்றும் ப்ளடி பெக்கர் போன்ற தமிழ்த் திரைப்படங்களுக்குப் போட்டியாக இறங்கிய இத்திரைப்படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

தற்போது திரையரங்குகளில் அமரன் திரைப்படத்திற்கு அடுத்ததாக மாஸ் காட்டிவரும் இந்த திரைப்படம் தற்போது 9 நாட்கள் முடிவில் உலகளாவிய வசூலில் சுமார் ரூ. 77.2 கோடிகளையும், தமிழ் நாட்டில் ரூ.7 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துவருகிறது. இந்த லக்கி பாஸ்கர் திரைப்படம் இன்னும் சில நாட்களில் ரூ.100 கோடி வசூலை பெரும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

இதையும் படிங்க :Beyond the Fairy Tale: நயன்தாராவின் “பேயொண்ட் தி ஃபரி டைல்”யின் ட்ரைலர் வெளியாகியுள்ளது..!

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?