‘எனக்கு இப்படி ஒரு நோய்.. 41 வயதில் தெரிந்தது’ – நடிகர் பகத் பாசில் ஓபன் டாக்!
Actor Fahadh Faasil: சமீபத்தில் பகத் பாசிலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை இ4 எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் என மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக இருந்துவருகிறார் பகத். கண்களாலேயே ஒட்டுமொத்த உணர்வுகளை வெளிப்படுத்தி ஆச்சரியமளித்துவருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பகத் பாசில்.வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் என தமிழில் வெறும் 4 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் தனது அசாத்தியமான நடிப்பு திறமையால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார் பகத் பாசில். குறிப்பாக எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை கையாண்ட விதத்தால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘ஆவேஷம்’ . இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஆசிஸ் வித்யார்தி, சஜின் கோபு,பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக கூறப்படும் இப்படம் வரும் ரூ.150 கோடியைத் தாண்டி வசூலித்தது. இந்நிலையில், படம் கடந்த 9-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஓடிடியில் ரசிகர்கள் அதிக அளவில் பார்த்த படமாக ஆவேஷம் மாறியது.
சமீபத்தில் பகத் பாசிலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை இ4 எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
Also read… வெற்றிமாறனின் ’விடுதலை 2’… கேமியோவில் கலக்க வரும் பிரபல நடிகர்!
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பகத் பாசில் தனக்கு ADHD நோய் இருப்பதாக தெரிவித்துள்ளார். தனது 41 வயதில் இந்த நோய் தனக்கு இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார். ADHD அல்லது அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபராக்டிவிட்டி கோளாறு என்பது குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும். இது உள்ளவர்களால் எதிலும் கவனம் செலுத்த முடியாது. இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் அதிகப்படியான உடல் உழைப்பு மற்றும் ஒருவரின் வயதுக்கு ஏற்ற வகையில் நடத்தையை கட்டுப்படுத்த இயலாமை இந்த நோயின் தாக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து அறிந்த ரசிகர்கள் தற்போது வருத்தத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.