பகத் பாசிலின் நியூ லுக்… சோசியல் மீடியாவை கலக்கும் போட்டோ! - Tamil News | Actor Fahadh Faasils new pictures goes viral on social media | TV9 Tamil

பகத் பாசிலின் நியூ லுக்… சோசியல் மீடியாவை கலக்கும் போட்டோ!

Actor Fahadh Faasil: கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள சுல்தான் பத்தேரி பகுதியில் தனியார் நகை கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர் பகத் பாசில் கலந்துகொண்டார். அவரின் புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

பகத் பாசிலின் நியூ லுக்... சோசியல் மீடியாவை கலக்கும் போட்டோ!

பகத் பாசில்

Published: 

26 May 2024 15:56 PM

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பகத் பாசில்.வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் என தமிழில் வெறும் 4 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் தனது அசாத்தியமான நடிப்பு திறமையால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார் பகத் பாசில். குறிப்பாக எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை கையாண்ட விதத்தால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் என மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக இருந்துவருகிறார் பகத். கண்களாலேயே ஒட்டுமொத்த உணர்வுகளை வெளிப்படுத்தி ஆச்சரியமளித்துவருகிறார். தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘ஆவேஷம்’ . இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஆசிஸ் வித்யார்தி, சஜின் கோபு, பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

Also read… அம்பேத்கர் – காந்தி குறித்து பேசிய ஜான்வி கபூர்… வைரலாகும் வீடியோ!

கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக கூறப்படும் இப்படம் வரும் ரூ.150 கோடியைத் தாண்டி வசூலித்தது. இந்நிலையில், படம் கடந்த 9-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஓடிடியில் ரசிகர்கள் அதிக அளவில் பார்த்த படமாக ஆவேஷம் மாறியது.

சமீபத்தில் பகத் பாசிலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை இ4 எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள சுல்தான் பத்தேரி பகுதியில் தனியார் நகை கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர் பகத் பாசில் கலந்துகொண்டார். அவரின் புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அசத்தலான புதிய அம்சங்களை அறிமுகம் செய்த யூடியூப்!
பப்பாளியை அதிகமாக எடுத்துக்கொள்வதை ஏன் தவிர்க்க வேண்டும் தெரியுமா?
கீர்த்தி சுரேஷ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!
இந்த குழந்தை யார் தெரியுமா..? பிரபல நாயகி!