5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Mental Manadhil: மீண்டும் இணையும் செல்வராகவன் -ஜிவி பிரகாஷ்.. மேஜிக் நிகழுமா?

G.V.Prakash Kumar - Selvaraghavan :தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருந்து வருபவர் செல்வராகவன். நடிகர் தனுஷின் சகோதரரான இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது இவர் இரண்டாண்டு இடைவெளிக்குப் பின் படம் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Mental Manadhil: மீண்டும் இணையும் செல்வராகவன் -ஜிவி பிரகாஷ்.. மேஜிக் நிகழுமா?
இயக்குனர் செல்வராகவன் – ஜிவி பிரகாஷ்குமார்
barath-murugan
Barath Murugan | Published: 14 Dec 2024 13:29 PM

தமிழ் சினிமாவில் 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் செல்வராகவன். இப்படத்தைத் தொடர்ந்து  பல படங்களில் இயக்குநராகவும், முக்கிய நடிகராகவும் நடித்துள்ளார். இவர் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகனும், நடிகர் தனுஷின் அண்ணனும் ஆவார். “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் தனது முதல் திரைப்படத்தில் நடிகர் தனுஷையும் நடிகராக அறிமுகம் செய்தார். தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் எனப் பல படங்களை இயக்கினார். இந்நிலையில் நடிகர் தனுஷை வைத்து கடைசியாக “நானே வருவேன்” என்ற க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தினை இயக்கினார்.

நடிகர் தனுஷ் இப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் செல்வராகவனின் நடிப்பில் கடைசியாகச் சொர்க்கவாசல் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து மீண்டும் திரைப்படங்களை இயக்க ஆரம்பித்துள்ளார். இவர் இயக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டிலை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். முற்றிலும் காதல், ரொமான்ஸ் போன்ற கதைக்களத்துடன் அமைந்திருக்கும் இப்படத்தின் டைட்டில் விவரங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

நடிகர் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை பற்றிய அப்டேட்:

தற்போது செல்வராகவன் இயக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார். “மெண்டல் மனதில்” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இதையும் படிங்க:சூர்யாவை வைத்து படம் எடுக்க மாட்டேன்.. இயக்குநர் மிஷ்கின் அதிரடி!

இயக்குநர் செல்வராகவனின் மயக்கம் என்ன மற்றும் ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 3-வது முறையாக தற்போது, மெண்டல் மனதில் படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார். முற்றிலும் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தில் “பூமிகா” திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான “மதுரியா ஜெயின்” கதாநாயகியாக நடிக்க உள்ளார். இயக்குநர் செல்வராகவன் இயக்கும் இப்படத்தின் டைட்டிலை அவரின் சகோதரரும், நடிகருமான தனுஷ் நேற்று வெளியிட்டார். “மெண்டல் மனதில்” முற்றிலும் காதல் கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பானது விரைவில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:சிறையிலிருந்து விடுதலை.. அல்லு அர்ஜூன் எடுக்கப்போகும் முடிவு என்ன?

இயக்குனர் செல்வராகவன், ஜி.வி பிரகாஷின் காம்போ:

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி மற்றும் யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களுக்குப் பிறகு, மீண்டும் பெரிய அளவிற்கு உருவாகும் காதல் திரைப்படமாக மெண்டல் மனதில் திரைப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:2024-ம் ஆண்டு ரசிகர்களை பெரிதும் கவராத படங்களின் லிஸ்ட் இதோ!

இயக்குநர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 மற்றும் புதுப்பேட்டை 2 போன்ற திரைப்படங்களை இயக்கும் முன் இப்படத்தினை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷிற்கு இந்த ஆண்டு அந்த அளவிற்கு பெரியதாக திரைப்படங்கள் எதுவும் அமையவில்லை.

தொடர்ந்து அவர் அமரன்,லக்கி பாஸ்கர், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் கடைசியாகக் கடந்த மார்ச் மாதம் வெளியான “ரெபல்” ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து முழுவதுமாக இசையமைப்பில் மூழ்கிய ஜி.வி பிரகாஷ் தற்போது , இயக்குநர் செல்வராகவன் இயக்கம் மெண்டல் மனதில் திரைப்படத்தில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் கமிட்டாகி உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகளானது வரும் 2025ம் ஆண்டு கோடைக்காலத்தில் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

தற்போது ஜி.வி. பிரகாஷ் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இசையமைப்பில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க:‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!

Latest News