ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ள அடுத்த திரைப்படம்..! இயக்குநர் யார் தெரியுமா..? - Tamil News | Actor Harish Kalyan Next Movie With Lift Movie Director Vinoth Update In Tamil | TV9 Tamil

ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ள அடுத்த திரைப்படம்..! இயக்குநர் யார் தெரியுமா..?

Published: 

06 Oct 2024 13:04 PM

Actor Harish Kalyan : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். தமிழில் தற்போது வெளியான "லப்பர் பந்து" திரைப்படம் மூலமாக தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். இதையடுத்து டீசல் மற்றும் நூறு கோடி வானவில் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்ற நிலையில் பிரபல இயக்குநருடன் அடுத்த திரைப்படத்தில் நடிக்கத் தயாராகியுள்ளார்.

ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ள அடுத்த திரைப்படம்..! இயக்குநர் யார் தெரியுமா..?

நடிகர் ஹரிஷ்

Follow Us On

நடிகர் ஹரிஷ் : தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் மிகப் பிரபலமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். இவரின் அருமையான நடிப்பில் தற்போது வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இதையடுத்து இவரின் நடிப்பில் ஏற்கனவே டீசல் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இதைத்தொடர்ந்து நூறுகோடி வானவில் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானதும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் கவின் நடிப்பில் 2021ல் வெளியான ‘லிப்ட்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வினீத் இயக்கத்தில் நடிக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

இதையும் படிங்க :இத்தனை கோடிகளா..! பிக்பாஸ் 8 நிகழ்ச்சியைத் தொகுக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

 

தமிழில் தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரீஷ் கல்யாண் 2010ல் இயக்குநர் சாமி இயக்கத்தில் வெளியான சிந்து சமவெளி நாகரிகம் திரைப்படத்தின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிகை அமலா பால் உடன் இணைந்து நடித்திருந்தார். இப்படமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறாமல் கடும் தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து அரிது அரிது மற்றும் சட்டப்படி குற்றம் போன்ற திரைப்படங்களும் அந்த அளவிற்குத் திரையரங்குகளில் ஓடவில்லை. அடுத்ததாகத் தெலுங்கு திரைப்படங்களைத் துணை கதாபாத்திரமாக நடிக்க ஆரம்பித்தார் இதுவும் அவருக்கான வெற்றியைத் தரவில்லை.

இதையும் படிங்க :Ajith Video: “சாதி, மதம்.. வெறுப்பை உண்டாக்கும்” வீடியோ வெளியிட்ட நடிகர் அஜித்!

 

இதனை அடுத்து 2014ல் இயக்குநர் தருண்குமார் இயக்கத்தில் வெளியான “பொறியாளன்” திரைப்படமானது இவருக்கு ஓரளவு வரவேற்பைத் தமிழ் மக்களிடையே தந்தது. இந்த திரைப்படத்தில் நடிகை கயல் ஆனந்தி உடன் இணைந்து நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலமாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. இதையடுத்து “பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ,தாராள பிரபு மற்றும் ஹோ மணப்பெண்ணே போன்ற திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.

இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து நீண்டநாட்களுக்குப் பிறகு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது இயக்குநர் தமிழரசன் இயக்கத்தில் செப்டம்பர் 20ல் வெளியான லப்பர் பந்து. இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் மற்றும் சஞ்சனா போன்றவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் கதைக்களமானது கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. இத்திரைப்படம் வெளியான வித்தில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் தமிழ் கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்கள் எனப் பலரும் இந்த திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். இப்படத்தை கிரிக்கெட் வீரர் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்பஜன் சிங் போன்றோர்கள் தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்து இந்த திரைப்படத்தை பாராட்டியுள்ளனர்.

இதையும் படிங்க :வெளியானது வேட்டையன் படத்தின் ’ஹண்டர் வண்டார்’ பாடல் இதோ.!

 

லப்பர் பந்து திரையரங்குகளில் வெளியாகி சுமார் 25 கோடிக்கும் மேல் வசூல் செய்து தற்போது வெற்றிநடைப்போட்டு வருகிறது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து கடந்த ஆண்டே டீசல் திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படமானது சில காரணங்களுக்காக தற்போது வரை வெளியாகாமல் உள்ளது. இந்த திரைப்படமானது 2025ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து நூறுகோடி வானவில் என்ற திரைப்படமும் தற்போது வரை வெளியாகாமல் உள்ளது.

இதையும் படிங்க :வெளியானது அர்ஜுன் தாஸிலின் ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் டைட்டில் டீசர்..!

 

இந்த திரைப்படங்களை அடுத்து தற்போது இயக்குநர் வினீத் இயக்க உள்ள அடுத்த திரைப்படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றனர். இத்திரைப்படத்தை மலையாள முன்னணி நடிகர் செம்பம் வினோத் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை ஆக்கப்பூர்வமான தகவல்கள் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது இந்த திரைப்படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க :Vanitha Vijayakumar: மீண்டும் திருமணமா? ரகசியத்தை உடைத்த வனிதா விஜயகுமார்… இணையத்தில் பரவும் தகவல்!

பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள காலிஃபிளவர்..!
உடலுக்கு ஊட்டச்சத்துகளை தாராளமாக தரும் புளி..
தூங்குவதற்கு முன் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்
நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
Exit mobile version