‘ஸ்டார்’ படத்தில் நடிக்காது ஏன்? நடிகர் ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்! - Tamil News | Actor Harish Kalyan talks about why he didn't act in Star Movie | TV9 Tamil

‘ஸ்டார்’ படத்தில் நடிக்காது ஏன்? நடிகர் ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்!

Published: 

13 Sep 2024 14:25 PM

முன்னதாக இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்தது. படத்திற்காக ஹரிஷ் கல்யாணின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து எந்த காரணமும் தெரிவிக்காமல் ஹரிஷ் கல்யாண் ஏன் அவர் படத்தில் நடிக்கவில்லை என்பது குறித்தும் எந்த அறிவிப்பும் இன்றி நடிகர் கவின் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. படம் வெளியாகி இத்தனை மாதங்கள் கழித்து முதன் முறையாக ஹரிஷ் கல்யாண் ஏன் ஸ்டார் படத்தில் நடிக்கவில்லை என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஸ்டார்’ படத்தில் நடிக்காது ஏன்? நடிகர் ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்!

ஹரிஷ் கல்யாண்

Follow Us On

இயக்குநர் இளன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘ஸ்டார்’ படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணம் என்ன என்பது குறித்து நடிகர் ஹரிஸ் கல்யாண் வெளிப்படையாக பேசியுள்ளார். இயக்குநர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ‘ஸ்டார்’. சாதாரண மனிதனின் அசாதாரணமான கனவு பற்றிய இப்படத்தை அழகாக எடுத்துக்காட்டி இருந்தார் இயக்குனர் இளன். சிறு வயதில் இருந்தே சினிமாவில் நாயகனாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் கவின். அவருடைய தந்தையின் ஆசையும் அதுவே. பள்ளி, கல்லூரி என எங்கு சென்றாலும் நடிப்பின் மீது மட்டுமே ஆர்வமாக இருக்கிறார். திடீரென்று விபத்து ஏற்பட, கவினின் முகத்தில் காயம் ஏற்படுகிறது. இதனால் அவருடைய சினிமா வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் கதைக்களமாக உள்ளது.

சீரியல்கள் மற்றும்  பிக்பாஸ்  நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர்  நடிகர் கவின். லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து டாடா திரைப்படத்தில் கவின் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கினார். இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ், ‘முதலும் நீ முடிவு நீ’ ஹரிஷ் மற்றும் கே.பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தொடர்ந்து கவின் நடிப்பில் கடந்த மே 10-ம் தேதி ’ஸ்டார்’ படம் திரையரங்குகளில் வெளியானது. ’பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்தது.

ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால், இப்படத்துக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களில் நல்ல ஓபனிங் இருந்தது. மேலும் முதல் நாள் முதல் காட்சி அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டன. கவினின் முந்தைய டாடா படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் ஸ்டார் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 12 கோடி ரூபாய் முதலீட்டில் உருவான அந்த படம் 26 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

முன்னதாக இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்தது. படத்திற்காக ஹரிஷ் கல்யாணின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து எந்த காரணமும் தெரிவிக்காமல் ஹரிஷ் கல்யாண் ஏன் அவர் படத்தில் நடிக்கவில்லை என்பது குறித்தும் எந்த அறிவிப்பும் இன்றி நடிகர் கவின் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. படம் வெளியாகி இத்தனை மாதங்கள் கழித்து முதன் முறையாக ஹரிஷ் கல்யாண் ஏன் ஸ்டார் படத்தில் நடிக்கவில்லை என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் ” ஸ்டார் படத்தைச் சுற்றி நிறைய விஷயங்கள் நடந்தன. அதில் சில விஷயங்கள் என் கவனத்திற்கு வந்தன, என் கவனத்திற்கு வராத விஷயங்களை சம்பந்தபட்ட  நபர் என்னிடம் தெரியப் படுத்தி இருக்கலாம். அது ஒன்றுதான் என்னுடைய வருத்தம். ஸ்டார் படத்திற்கான வேலைகளை நாங்கள் 2020 ஆம் ஆண்டு தொடங்கினோம். ஆனால் கொரோனா காரணத்தினால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது.

Also read… சூர்யா படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை

பின்பு ஒன்றரை ஆண்டுகளாக படம் குறித்து எந்தவொரு தகவலுமே இல்லை. பின்பு ‘ஸ்டார்’ படம் குறித்த அறிவிப்பு வந்தது. அதற்குப் பின்பு அந்தப் படம் குறித்து நான் எதுவும் கேட்கவில்லை. இந்தப் படம் வேறொரு நாயகனை வைத்து செய்கிறோம் என்று யாரும் சொல்லவில்லை. இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், முன்பு, பின்பு என்ன நடந்தது என்று தெரியும். அந்தப் படம் தொடங்கப்படும் முன்பு என்ன நடந்தது என்று சொன்னால் யாரையோ குற்றம் சொல்வது போல் இருக்கும். தொழிலைக் காட்டிலும் நான் மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவன். எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒருவருடன் பொய்யாக பழக முடியாது என்று ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண்.பியார் பிரேமா காதல் , தாராள பிரபு , இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான பார்க்கிங் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது லப்பர் பந்து படத்தில் நடித்துள்ளார். தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் , வதந்தி சஞ்சனா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து காலி வெங்கட் , தேவதர்ஷினி உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் உள்ளார்கள் . லப்பர் பந்து திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
Exit mobile version