’Devara: Part 1′ Twitter Review: ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா: பகுதி 1 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ - Tamil News | Actor Jr NTR starrer Devara Part 1 movie Twitter review | TV9 Tamil

’Devara: Part 1′ Twitter Review: ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா: பகுதி 1 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Updated On: 

27 Sep 2024 08:51 AM

பெரும் பொருட் செலவில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்திய படமாக வெளியாகியுள்ளது. ’ஆர்ஆர்ஆர்’ படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து ஜூனியர் என்டிஆர் படம் திரையரங்கில் வெளியாவதால், அவரது ரசிகர்கள் இந்த படத்துக்காக தொடக்கம் முதலே ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

’Devara: Part 1 Twitter Review: ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா: பகுதி 1 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

தேவாரா: பகுதி 1

Follow Us On

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள தேவாரா பகுதி 1. படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து படம் பார்த்த ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள படம் தேவரா. இந்த படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தென்னிந்தியாவில் அவர் நடிக்கும் முதல் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் சைஃப் அலி கான் மற்றும் கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரும் பொருட் செலவில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்திய படமாக வெளியாகியுள்ளது. ’ஆர்ஆர்ஆர்’ படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து ஜூனியர் என்டிஆர் படம் திரையரங்கில் வெளியாவதால், அவரது ரசிகர்கள் இந்த படத்துக்காக தொடக்கம் முதலே ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

கடல் சார்ந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக தேவரா உருவாகியுள்ள நிலையில், இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அனிருத் இசையில் பாடல்கள் எல்லாம் படு ஹிட்டாக அமைந்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நள்ளிரவு 1 மணிக்கே திரையிடப்பட்டது. இந்த நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

நண்டில் இப்படி ஒரு விஷயம் இருக்கா? அறிந்திடாத மருத்துவ நன்மைகள்..!
மன அழுத்தம் குறைய வேண்டுமா? அப்போ இது ஒன்னே போதும்.
நடிகை ஹன்சிகா மோத்வானியின் ரீசென்ட் ஆல்பம்
அழகியே... மிருணாள் தாகூரின் அசத்தல் ஆல்பம்
Exit mobile version