ஏஐ டெக்னாலஜியை படிக்க அமெரிக்கா சென்ற கமல்… தீயாய் பரவும் செய்தி

Actor Kamal Hasaan: ஏஐ தொடர்பான 90 நாள் படிப்பை தொடங்குவதற்காக கமல் கடந்த வார இறுதியில் அமெரிக்கா சென்றதாக செய்திகள் பரவின. 69 வயதாகும் ஒரு நடிகர் உலக சினிமாவில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் ஏஐ டெக்னாலஜி குறித்து படிப்பதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த ஏஐ டெக்னாலஜியை முறைப்படி படிப்பதற்காக உலகநாயகன் கமல்ஹாசன் அமெரிக்கா சென்று இருப்பதாகவும் அங்கு அவர் சில மாதங்கள் தங்கி இருந்து இந்த டெக்னாலஜியை முழுமையாக படித்துவிட்டு சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

ஏஐ டெக்னாலஜியை படிக்க அமெரிக்கா சென்ற கமல்... தீயாய் பரவும் செய்தி

கமல்

Updated On: 

29 Oct 2024 15:14 PM

ஆர்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸ் (artificial intelligence) என்று அழைக்கப்படும் ஏஐ தொழில்நுட்பம் பற்றி படிப்பதற்காக நடிகர் கமல் ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளார் என்ற தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. சினிமா மீது தீராக் காதல் கொண்டவர் நடிகர் கமல் ஹாசன். உலக சினிமாவில் காட்டப்படும் புதுமையை தமிழ் சினிமாவில் கொண்டுவர நினைப்பவர் கமல். அதனால் தான் அவர் ரசிகர்களால் உலக நாயகன் என்று கொண்டாடப்படுகிறார். உலக சினிமாவில் எந்த ஒரு புதிய டெக்னாலஜி வந்தாலும் அதை கமல்ஹாசன் தான் தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்துவார் என்று கூறப்படும் நிலையில் தற்போது சினிமா உட்பட அனைத்து துறைகளிலும் ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி புகுந்து விட்டது. இதனை படிக்க கமல் அமெரிக்கா சென்றுள்ளார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றது.

ஏஐ தொடர்பான 90 நாள் படிப்பை தொடங்குவதற்காக கமல் கடந்த வார இறுதியில் அமெரிக்கா சென்றதாக செய்திகள் பரவின. 69 வயதாகும் ஒரு நடிகர் உலக சினிமாவில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் ஏஐ டெக்னாலஜி குறித்து படிப்பதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த ஏஐ டெக்னாலஜியை முறைப்படி படிப்பதற்காக உலகநாயகன் கமல்ஹாசன் அமெரிக்கா சென்று இருப்பதாகவும் அங்கு அவர் சில மாதங்கள் தங்கி இருந்து இந்த டெக்னாலஜியை முழுமையாக படித்துவிட்டு சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

Also read… Dilli Babu: பேச்சுலர், ராட்சசன் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகினர்

கமலின் நடிப்பில் இறுதியாக வெளியான இந்தியன் 2 படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இணையத்தில் ரசிகர்களால் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பிரபாஸின் கல்கி படத்தில் வித்யாசமான தோற்றத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. திரைத்துறையை பொறுத்தவரை முதல் டிஜிட்டல் படம், மென்பொருளை கணினி வழியாக திரைப்படத்தில் பயன்படுத்தியது. முழு நீள மௌன திரைப்படம், லைவ் ஆடியோ Recording, CD வடிவில் படங்களை பதிவு செய்வது, மல்டி கேரக்டர் எடிட்டிங், ஆஸ்காருக்கு அதிகம் பரிந்துரைக்கப்பட்ட படங்கள் என்று கமல் செய்த சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். கமல்ஹாசன் ஏஐ டெக்னாலஜியை படித்து முடித்துவிட்டால் அவருடைய அடுத்தடுத்த படங்களில் இந்த டெக்னாலஜி பயன்படுத்தப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!