‘மெய்யழகன்’ படத்தில் நடிக்க இதுதான் காரணம் – நடிகர் கார்த்தி விளக்கம்
Meiyazhagan | நடிகர் கார்த்தி மெய்யழகன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதை விட அவர் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். கார்த்தியின் எதார்த்தமான நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தான் இந்த திரைப்படத்தில் நடித்ததற்கான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார்.
’மெய்யழகன்’ படத்தில் நடிக்க இதுதான் காரணம் என்று நடிகர் கார்த்தி விளக்கம் அளித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் பிரேம் குமார். இவர் அடுத்ததாக கார்த்தியின் 27-வது படத்தை இயக்கியுள்ளார். மெய்யழகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா மற்றும் தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படம் கடந்த மாதம் 27-ம் தேதி வெளியான நிலையில் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்று நடிகர் கார்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
தஞ்சாவூரில் இருக்கும் நீடாமங்கலம் என்ற கிராமத்தில் பூர்வீக வீட்டில் குடியிருக்கும் பதின் வயது அரவிந்தசாமி சொத்து தகராறு காரணமாக அவர்கள் வீடு அவரின் அத்தை குடும்பத்திற்கு கை மாறி விட பின்பு தனது அப்பா மற்றும் அம்மா என மொத்த குடும்பமும் தஞ்சாவூரை காலி செய்துவிட்டு சென்னைக்கு குடியேறுகின்றனர். 22 வருடங்களுக்கு பிறகு அரவிந்தசாமியின் சித்தப்பாவின் மகள் திருமணத்திற்காக மீண்டும் தஞ்சாவூருக்கு வருகிறார் அரவிந்தசாமி. வந்த இடத்தில் ஒரு சம்பிரதாயத்திற்காக திருமணத்தில் தலை காட்டி விட்டு இரவோடு இரவாக சென்னைக்கு கிளம்பி வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் அரவிந்தசாமியை அவரது உறவுக்காரரான பெயர் தெரியாத கார்த்தி விழுந்து விழுந்து கவனிக்கிறார். அரவிந்தசாமி நிழல் போல் கூடவே இருந்து கொண்டு அவரை அத்தான்… அத்தான்… என அன்பு தொல்லை கொடுக்கிறார். ஆனால் கார்த்தியை யார் என்று அரவிந்த்சாமிக்கு சுத்தமாக ஞாபகம் வரவில்லை. அவரும் மற்றவர்கள் யாரிடமாவது கேட்டு தெரிந்துகொள்ள எவ்வளவோ முயற்சி செய்தபோதும் கார்த்தி தனக்கு எந்த முறையில் உறவு என அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
Also read… குட் பேட் அக்லி படத்தின் புது லுக்கில் அஜித் – வைரலாகும் போட்டோ
உள்ளூரில் குடிகாரனுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்ட முறைப்பெண் ‘நான் உன்னையே கட்டியிருக்கலாம்’ என்று ஏக்கத்தோடு அரவிந்த்சாமியிடம் சொல்வது, தங்கையான கல்யாணப் பெண், அண்ணன் அரவிந்த்சாமி கொண்டுவந்த ‘கிஃப்டை’ மேடையிலேயே பிரித்து அணிந்து கொள்ளும் பாசம், பல வருடங்கள் கழித்து வந்திருக்கிற அத்தானை ஏமாற்றி, ஒரு நாள் இரவு தங்க வைத்து விடுகிற மாப்பிள்ளையின் மகிழ்ச்சி என எல்லா படங்களிலும் இறுதியில் அழ வைக்கும் காட்சி இந்தப் படத்தில் ஆரம்பத்திலேயே ரசிகர்களை அழவைத்து எமோஷனலாகவும் கார்த்தியின் நகைச்சுவையில் கலகலப்பாவும் செல்கிறது படம்.
Also read… Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறப்போவது இவரா? இணையத்தில் கசிந்த தகவல்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்களது வேலைக்காக குடும்பங்களை பிரிந்து பலர் சென்னையில் வந்து வசிக்கின்றனர். அவர்கள் குடும்பம் சொந்த ஊரிலே இருப்பார்கள். அவர்களை பிரிந்து வாழ்வது ஒருபுறம் கடினமான ஒன்றாக இருக்கும். அதே நேரத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக தங்களது சொந்த ஊரை விட்டு, உறவுகளை விட்டு இரவோடு இரவாகா ஒரு குடும்பமே யாருக்கும் தெரியாமல் பிழைப்பு தேடி சென்னை வருவது வலி மிகுந்தது. அப்படி பல வருடங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரை விட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னை வரும் அரவிந்தசாமி மீண்டும் தனது சொந்த ஊரிற்கு செல்லும் போது அங்கு அவர் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் அனைத்தையும் சுற்றியே இந்தப் படம் அமைந்துள்ளது.
சொந்த ஊர், உறவுகள் ஆகியவற்றைப் பிரிந்து சிறிது காலம் வாழ்ந்துவிட்டு, மீண்டும் அதே ஊருக்கு திரும்புகிற ஒருவரின் பரிதவிப்பையும், மனவோட்டங்களையும் ஆழமாகப் பேசி இந்த உலகில் பலரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களின் நினைவுகளை கொண்டுவந்துள்ளார் இயக்குநர் பிரேம் குமார்.
இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன் என்று கார்த்தி சமீபத்தில் பேசியுள்ளார். அதில், ‘மெய்யழகன்’ ஒப்புக் கொண்டதற்கு தமிழ் சினிமாவுக்கு அருமையான படங்கள் கொடுத்த முக்கியமான இயக்குநர்கள் நன்றி சொல்ல வேண்டும். பாலசந்தர் சார், கே.விஸ்வநாத் சார், மகேந்திரன் சார், பாலு மகேந்திரா சார், கமல் சார் உள்ளிட்ட அனைவருமே உறவுகளை வைத்து கதைகள் செய்து அதை ரசிக்க வைத்து தூங்க விடாமல் செய்திருக்கிறார்கள். அந்த மாதிரியான படங்கள் கிடைக்காதா என்று ஏங்கும்போது, பிரேம்குமார் அப்படியொரு கதையினை எழுதியிருக்கிறார். அதை எப்படி மிஸ் பண்ண முடியும்? என்று தெரிவித்துள்ளார்.