’மெய்யழகன்’ படத்தின் மூன்று வார வசூல் எவ்வளவு தெரியுமா? - Tamil News | Actor Karthis Meiyazhagan Movie box office collection for 3 weeks | TV9 Tamil

’மெய்யழகன்’ படத்தின் மூன்று வார வசூல் எவ்வளவு தெரியுமா?

சொந்த ஊர், உறவுகள் ஆகியவற்றைப் பிரிந்து சிறிது காலம் வாழ்ந்துவிட்டு, மீண்டும் அதே ஊருக்கு திரும்புகிற ஒருவரின் பரிதவிப்பையும், மனவோட்டங்களையும் ஆழமாகப் பேசி இந்த உலகில் பலரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களின் நினைவுகளை கொண்டுவந்துள்ளார் இயக்குநர் பிரேம் குமார்.

’மெய்யழகன்’ படத்தின் மூன்று வார வசூல் எவ்வளவு தெரியுமா?

கார்த்தி - அரவிந்தசாமி

Published: 

12 Oct 2024 15:56 PM

கார்த்தி மற்றும் அரவிந்தசாமி நடிப்பில் வெளியான ‘மெய்யழகன்’ படத்தின் மூன்று வார வசூல் நிலவரம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் பிரேம் குமார். இவர் அடுத்ததாக கார்த்தியின் 27-வது படத்தை இயக்கியுள்ளார். மெய்யழகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா மற்றும் தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படம் கடந்த மாதம் 27-ம் தேதி வெளியான நிலையில் இதுவரை வசூலித்தது எவ்வளவு என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தஞ்சாவூரில் இருக்கும் நீடாமங்கலம் என்ற கிராமத்தில் பூர்வீக வீட்டில் குடியிருக்கும் பதின் வயது அரவிந்தசாமி சொத்து தகராறு காரணமாக அவர்கள் வீடு அவரின் அத்தை குடும்பத்திற்கு கை மாறி விட பின்பு தனது அப்பா மற்றும் அம்மா என மொத்த குடும்பமும் தஞ்சாவூரை காலி செய்துவிட்டு சென்னைக்கு குடியேறுகின்றனர். 22 வருடங்களுக்கு பிறகு அரவிந்தசாமியின் சித்தப்பாவின் மகள் திருமணத்திற்காக மீண்டும் தஞ்சாவூருக்கு வருகிறார் அரவிந்தசாமி. வந்த இடத்தில் ஒரு சம்பிரதாயத்திற்காக திருமணத்தில் தலை காட்டி விட்டு இரவோடு இரவாக சென்னைக்கு கிளம்பி வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் அரவிந்தசாமியை அவரது உறவுக்காரரான பெயர் தெரியாத கார்த்தி விழுந்து விழுந்து கவனிக்கிறார். அரவிந்தசாமி நிழல் போல் கூடவே இருந்து கொண்டு அவரை அத்தான்… அத்தான்… என அன்பு தொல்லை கொடுக்கிறார். ஆனால் கார்த்தியை யார் என்று அரவிந்த்சாமிக்கு சுத்தமாக ஞாபகம் வரவில்லை. அவரும் மற்றவர்கள் யாரிடமாவது கேட்டு தெரிந்துகொள்ள எவ்வளவோ முயற்சி செய்தபோதும் கார்த்தி தனக்கு எந்த முறையில் உறவு என அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

Also read… சிரிப்பழகி சினேகாவிற்கு ஹேப்பி பர்த்டே…!

சொந்த ஊர், உறவுகள் ஆகியவற்றைப் பிரிந்து சிறிது காலம் வாழ்ந்துவிட்டு, மீண்டும் அதே ஊருக்கு திரும்புகிற ஒருவரின் பரிதவிப்பையும், மனவோட்டங்களையும் ஆழமாகப் பேசி இந்த உலகில் பலரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களின் நினைவுகளை கொண்டுவந்துள்ளார் இயக்குநர் பிரேம் குமார்.

Also read… பர்த்டே கேர்ள் அக்‌ஷரா ஹாசன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்களது வேலைக்காக குடும்பங்களை பிரிந்து பலர் சென்னையில் வந்து வசிக்கின்றனர். அவர்கள் குடும்பம் சொந்த ஊரிலே இருப்பார்கள். அவர்களை பிரிந்து வாழ்வது ஒருபுறம் கடினமான ஒன்றாக இருக்கும். அதே நேரத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக தங்களது சொந்த ஊரை விட்டு, உறவுகளை விட்டு இரவோடு இரவாகா ஒரு குடும்பமே யாருக்கும் தெரியாமல் பிழைப்பு தேடி சென்னை வருவது வலி மிகுந்தது. அப்படி பல வருடங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரை விட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னை வரும் அரவிந்தசாமி மீண்டும் தனது சொந்த ஊரிற்கு செல்லும் போது அங்கு அவர் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் அனைத்தையும் சுற்றியே இந்தப் படம் அமைந்துள்ளது.

பெரிய நடிகர்களின் படங்களுக்கு இடையில் ஒளிபரப்பாகி வந்த மெய்யழகன் படம் 3 வார முடிவில் ரூ. 30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. குடும்பங்கள் கொண்டாடிய இப்பட வெற்றி படக்குழுவினருக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட் இதோ!
ஹேப்பி பர்த்டே அக்‌ஷரா ஹாசன்...
பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்னேகா...!
மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
Exit mobile version