Swaminathan: வடிவேலு அப்படி பண்ணியிருக்கக்கூடாது.. சுவாமிநாதனுக்கு நடந்த கசப்பான சம்பவம்!

Tamil Cimema: சின்னத்திரையில் படங்களை கிண்டல் செய்து ஒளிபரப்பான நிகழ்ச்சியான லொள்ளுசபா சுவாமிநாதனுக்கு மிகப்பெரிய அளவில் திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு ஆறு படத்தில் காமெடி ரோலில் நடிக்க ஆரம்பித்தவருக்கு தொடர்ந்து 19 ஆண்டுகளாக பல படங்கள் பேர் சொல்லும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் அத்தகைய ஆறு படம் இவருக்கு கொஞ்சம் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்து விட்டது.

Swaminathan: வடிவேலு அப்படி பண்ணியிருக்கக்கூடாது.. சுவாமிநாதனுக்கு நடந்த கசப்பான சம்பவம்!

கோப்பு புகைப்படம்

Published: 

03 Aug 2024 16:05 PM

லொள்ளு சபா சுவாமிநாதன்: 1985 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சுவாமி நாதன். தொடர்ச்சியாக நானே ராஜா நானே மந்திரி, சின்னப்பூவே மெல்லப்பேசு, சிங்கார வேலன், கருப்பு நிலா, பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் சின்னத்திரையில் படங்களை கிண்டல் செய்து ஒளிபரப்பான நிகழ்ச்சியான லொள்ளுசபா சுவாமிநாதனுக்கு மிகப்பெரிய அளவில் திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு ஆறு படத்தில் காமெடி ரோலில் நடிக்க ஆரம்பித்தவருக்கு தொடர்ந்து 19 ஆண்டுகளாக பல படங்கள் பேர் சொல்லும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் அத்தகைய ஆறு படம் இவருக்கு கொஞ்சம் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்து விட்டது. ஹரி இயக்கிய அப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, வடிவேலு காமெடி கேரக்டரில் நடித்திருந்தார்.

Also Read: சென்னையில் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் திடீர் மரணம்.. நடந்தது என்ன?

ஒரு நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “வடிவேலு நடிகர் ராஜ்கிரணின் அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக இருந்தார். நான் அப்போது நடித்துக் கொண்டிருந்தேன். நான் ராஜ்கிரண் அலுவலகத்துக்கு செல்லும்போது வடிவேலு எனக்கு டீ கொடுப்பார். அப்போது தலைவா நமக்கு ஏதாவது சான்ஸ் இருந்தா சொல்லுங்க என கேட்பார். அதே வடிவேலு சிங்கார வடிவேலன் படத்தில் கமலுடன் இருக்கும் நான்கு நண்பர்களில் ஒருவராக வருவார். நான் அப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பேன். ஆர்.வி.உதயகுமார் இப்படி ஒரு கேரக்டர் இருக்கிறது நடி என கேட்டுக்கொண்டதால் நடித்தேன். ஷூட்டிங்கிற்காக காரில் செல்லும்போது வடிவேலு என்னிடம் தலைவா நான் இப்படி டிரைவர் கிட்ட உட்கார்ந்துக் கொள்கிறேன். நீங்க நல்லா உட்கார்ந்து வாங்க என சொன்னார்.

அப்படியே கட் பண்ணினால் 2005 ஆம் ஆண்டு ஆறு படத்தில் நடிக்கும்போது தான் வடிவேலுவை நாம் மீண்டும் பார்த்தேன். அந்த ஷூட்டிங்கில் அவர் பேசியதே வேறு மாதியாக இருந்தது. வாங்க நம்ம தோஸ்து கூட எல்லாம் நடிச்சிருக்கீங்க போல. வசனம் எல்லாம் பார்த்துட்டீங்களா. ஓகே வா என கேட்டார். அந்த காட்சியில் ஏதோ தப்பாக இருக்கு என வடிவேலு சொல்லிக்கொண்டே இருந்தார்.

Also Read: Sorimuthu Ayyanar: குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய சொரிமுத்து அய்யனார் கோயில்!

அப்போது நான் இயக்குநர் ஹரியிடம் வடிவேலுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் ஏதாவது தப்பு செய்தால் சொல்லிக்கொடுக்க சொல்லுங்க. இது தப்பு என சொல்லாதீங்க என கூறினேன். பின்னர் மீண்டும் அந்த காட்சி படமாக்கப்பட்டபோது ஹரி என்னைப் பார்த்து கண்ணடித்து வடிவேலு சொன்ன மாதிரி பண்ணிட்டு இருக்கும்போது நான் சொன்ன மாதிரியும் பண்ணிடுங்க என சொல்ல அந்த காட்சி ஓகே ஆனது. ஆனால் வடிவேலு காட்சி ஓகே இல்லை என சொல்லவும், சுவாமிநாதன் ப்ரேமில் வர மாட்டார் என சொல்லவும் சரி ஓகே என ஒப்புக்கொண்டார்” என சுவாமிநாதன் தெரிவித்தார்.

மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்