Cinema Rewind: விக்ரம் வேதா படத்தில் டயலாக் ரைட்டர் ஆனது எப்படி? மணிகண்டன் சொன்ன விசயம் - Tamil News | Actor Manikandan opens up about Dialogue writer in Vikram Vedha | TV9 Tamil

Cinema Rewind: விக்ரம் வேதா படத்தில் டயலாக் ரைட்டர் ஆனது எப்படி? மணிகண்டன் சொன்ன விசயம்

Published: 

17 Aug 2024 17:43 PM

Actor Manikandan: விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஏலே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் ஒரு தேர்ந்த எழுத்தாளரும் கூட. விக்ரம் வேதா திரைப்படத்துக்கு டயலாக் ரைட்டராகவும் பணியாற்றியுள்ளார். ஜெய் பீம் திரைப்படத்தில் ராஜாகண்ணு என முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்த மணிகண்டன், நடிகராக ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். 

Cinema Rewind: விக்ரம் வேதா படத்தில் டயலாக் ரைட்டர் ஆனது எப்படி? மணிகண்டன் சொன்ன விசயம்

மணிகண்டன்

Follow Us On

இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ’விக்ரம் வேதா’ டயலாக் ரைட்டர் ஆனது எப்படி என்பது குறித்து நடிகர் மணிகண்டன் முன்னதாக பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமாவில் பயணிக்கத் தொடங்கியவர் மணிகண்டன். சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக்கொண்டே கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதிலும் கவனம் செலுத்தினார். காதலும் கடந்து போகும், 8 தோட்டாக்கள் படங்கள் மூலம் ஓரளவு கவனம் ஈர்த்த மணிகண்டன், விக்ரம் வேதா படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களின் கவனத்தை அதிகம் பெற்றார். காரணம் இந்தப் படத்தில் நடித்தது மட்டும் இன்றி இந்தப் படத்திற்கு இவர் தான் வசனம் எழுதினார் என்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஏலே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் ஒரு தேர்ந்த எழுத்தாளரும் கூட. விக்ரம் வேதா திரைப்படத்துக்கு டயலாக் ரைட்டராகவும் பணியாற்றியுள்ளார். ஜெய் பீம் திரைப்படத்தில் ராஜாகண்ணு என முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்த மணிகண்டன், நடிகராக ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.

இவரது இயக்கத்தில் நரை எழுதும் சுயசரிதம் என்ற படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தொடர்ந்து படங்களில் நடிகராக அடுத்தடுத்து கமிட்டாகிவரும் மணிகண்டன், தன்னுடைய இயக்கத்தில் அடுத்ததாக விஜய் சேதுபதிக்காக ஒரு ஸ்கிரிப்டை எழுதி வருகிறார். விரைவில் அவரது இயக்கத்தில் அந்த படத்தின் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Also read…  Actor Vijay: அண்ணே வரார் வழிவிடு… மாஸாக வெளியானது ‘கோட்’ ட்ரெய்லர்

இந்த நிலையில் விக்ரம் வேதா படத்தில் தான் டயலாக் ரைட்டர் ஆனது எப்படி என்பது குறித்து நடிகர் மணிகண்டன் முன்னதாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. புஷ்கர் காயத்ரி இயக்கி விஜய் சேதுபதி, மாதவன் , கதிர் , வரலட்சுமி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மணிகண்டன் நடித்து வெளியான விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. புதிர் போடும் வசனங்கள், ஒரு கத சொல்லட்டுமா சார் என்கிற மாதிரியான வசனங்கள் படம் முழுவதும் இடம் பெற்றிருந்தன. இது ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

படத்திற்கு தான் வசனம் எழுத தேர்வு செய்யப்பட்ட கதையை மணிகண்டன் சொன்ன கதை மிக சுவாரஸ்யமானது.  இந்த படத்தில் விஜய் சேதுபதியின் சிபாரிசில் ஆடிஷனுக்காக தான் சென்றபோது காவலராக தான் நடிக்க கமிட் ஆனதாகவும் தொடர்ந்து வசனங்கள் எழுதுவீர்களா என்று படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி தன்னிடம் கேட்டதாகவும் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தான் படத்தின் இரண்டு காட்சிகளுக்கு வசனம் எழுதி எடுத்துக்கொண்டு போய் கொடுத்ததாகவும் உடனடியாக தன்னை அந்த படத்திற்கு வசனகர்த்தாவாக அவர்கள் பிக்ஸ் செய்ததையும் முன்னதாக ஒரு பேட்டியில் மணிகண்டன் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
நெல்லிக்கனி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
Exit mobile version