நீண்ட இழுபறிக்கு பின் வெளியாகும் ‘வாஸ்கோடமாகா’ – ரிலீஸ் தேதி இதோ! - Tamil News | Actor Nakkhuls Vascotakama movie Release Update out now | TV9 Tamil

நீண்ட இழுபறிக்கு பின் வெளியாகும் ‘வாஸ்கோடமாகா’ – ரிலீஸ் தேதி இதோ!

Published: 

30 Jun 2024 14:44 PM

Vascotakama movie: நகுல் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாஸ்கோடகாமா’ என்ற படத்தை இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தை 5656 புரொடக்ஷன் சார்பில் டத்தோ பி .சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.வி.அருண் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ‘என்னோட பாஷா’ என்ற பாடலை பாடியுள்ளார்.

நீண்ட இழுபறிக்கு பின் வெளியாகும் ‘வாஸ்கோடமாகா’ - ரிலீஸ் தேதி இதோ!

வாஸ்கோடமாகா

Follow Us On

ஆர் ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்துள்ள ’வாஸ்கோடகாமா’ படம் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் சங்கரின் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான நகுல் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகம் ஆன போது, கொழு கொழு இளைஞராக இருந்த நடிகர் நகுல், அடுத்தடுத்த படங்களில் எடை குறைத்து, ஃபிட்டாக்கி பலரையும் ஆச்சரியப்படுத்தினார். காதலில் விழுந்தேன் திரைப்படத்தில், கதாநாயகனான நடிகை சுனைனாவுடன் நடித்த நகுல், ‘நாக்க மூக்க’ பாடல் மூலம் பெரிய புகழ் பெற்றார். நடிப்பு, நடனம் என்று ஒரு எல்லாவற்றிலும் அசத்தும் ஒரு புதிய நடிகர் கிடைத்துவிட்டார் என்று பாராட்டைப் பெற்றார். அதன் பிறகு வெளியான திரைப்படங்கள் ஓரளவுக்கு வெற்றி பெற்றன.

நடிகர் நகுலைப் பலருக்கும் அறியாத விஷயம், இவர் பல திரைப்படங்களில் பாடியுள்ளார் என்பது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்த பல படங்களில், நடிகர் நகுல் பாடியுள்ளார். அந்நியன் திரைப்படத்தின் காதல் யானை வருகுது ரெமோ, கஜினி திரைப்படத்தின் X-மச்சி பாடல், வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் கற்க கற்க பாடல், வல்லவன் திரைப்படத்தில் ஹூரே ஹூரே பாடல் உள்ளிட்ட பல பாடல்களை நகுல் பாடியுள்ளார். மேலும், இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த ‘நாக்க மூக்க’ பாடலை, விஜய் ஆண்டனி இசையில் நகுல் பாடியுள்ளார்.

Also read… விஜய் சேதுபதியின் மகாராஜா இதுவரை வசூலித்தது எவ்வளவு தெரியுமா?

தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வரும் நடிகர் நகுல் நடிப்பில், ’எரியும் கண்ணாடி’ மற்றும் ’வாஸ்கோடகாமா’ என இரண்டு படங்கள் தயாராகி நீண்ட நாட்களாக திரையரங்குகளில் வெளியாகமல் உள்ளது.

நகுல் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாஸ்கோடகாமா’ என்ற படத்தை இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தை 5656 புரொடக்ஷன் சார்பில் டத்தோ பி .சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.வி.அருண் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ‘என்னோட பாஷா’ என்ற பாடலை பாடியுள்ளார். கடந்த 2022 ஆண்டே தொடங்கிய இந்தப் படம் தற்போதுதான் திரையரங்குகளில் வெளியாகவுள்ள்ளது. அதன்படி இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version