தளபதி 69 படத்தில் இணைந்த நடிகர் நரேன்… போஸ்டரை வெளியிட்ட படக்குழு - Tamil News | actor narain join vijays Thalapathy 69 movie officially announced by movie crew | TV9 Tamil

தளபதி 69 படத்தில் இணைந்த நடிகர் நரேன்… போஸ்டரை வெளியிட்ட படக்குழு

Published: 

03 Oct 2024 18:03 PM

கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தில் நடிக்க உள்ள சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கின்றன. அதன்படி இந்த படத்தில் நடிகர் பாபி தியோல், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியாமணி உள்ளிட்டோர் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தளபதி 69 படத்தில் இணைந்த நடிகர் நரேன்... போஸ்டரை வெளியிட்ட படக்குழு

நடிகர் நரேன்

Follow Us On

விஜயின் தளபதி 69 படத்தில் நடிகர் நரேன் இணைந்துள்ளதை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.மேற்கு வங்கத்தில் பிறந்த நரேன் படித்ததெல்லாம் கேரளா மற்றும் சென்னையில்தான். மலையாள படங்களின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான நரேன் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே, தம்பிக்கோட்டை, கோ, முகமூடி, கத்துக்குட்டி, ரம், ர டர்ன், கைதி, சாம்பியன், விக்ரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நரேன். இவர் தற்போது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தில் இணைந்துள்ளது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மலையாள நடிகரான நரேன், கடந்த 2006-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து எஸ்.ஏ.சி இயக்கிய நெஞ்சிருக்கும் வரை, தங்கர்பச்சனின் பள்ளிக்கூடம், மிஷ்கினின் அஞ்சாதே என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து பாப்புலர் ஆனார் நரேன். பின்னர் சில ஆண்டுகள் தமிழ் படங்களில் நடிக்காமல் மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நரேன், கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த கத்துக்குட்டி படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.

Also read… சத்யராஜ் உடன் இருக்கும் இந்த சிறுவன் இப்போ மாஸ் நடிகர்… யார் தெரியுதா?

வெங்கட் பிரபு இயக்கிய ‘தி கோட்’ படத்தினை முடித்துவிட்டு, ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார் நடிகர் விஜய். இதனை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை நாளை (அக்.4) சென்னையில் நடைபெற உள்ளது.

நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த நிலையில் அவரது கடைசி படமான தளபதி 69 படத்துடன் அவர் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.

Also read… Theatre Release Movies: இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தில் நடிக்க உள்ள சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கின்றன. அதன்படி இந்த படத்தில் நடிகர் பாபி தியோல், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியாமணி உள்ளிட்டோர் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த வகையில் 6-வது அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் நரேன் இணைந்துள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.

விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படம் குறித்த அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களை எமோஷனல் ஆக்கியுள்ளது. தளபதிக்கு பிரியா விடை கொடுக்க காத்திருக்கும் அவர்களுடைய திரையுலக ரசிகர்கள் சார்பாக, 5 நிமிடங்கள் ஓடும் ஒரு நெகிழ்ச்சியான காணொளியை அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் கடந்த மாதம் 14-ம் தேதி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் வருகிறார்” என்று குறிப்பிட்டு படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதையும் இதற்கு அனிருத் இசையமைக்க உள்ளதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version