மகன் திருமணம்.. தாலி கட்டியதும் ஆனந்த கண்ணீர் விட்ட நெப்போலியன்! - Tamil News | Actor Nepolean got emotional at his elder son dhanoosh wedding in Jappan | TV9 Tamil

மகன் திருமணம்.. தாலி கட்டியதும் ஆனந்த கண்ணீர் விட்ட நெப்போலியன்!

Nepoleon Son Marriage: நெப்போலியன் மற்றும் அவர்களது குடும்பம் தொடர்பான செய்திகளும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. நெப்போலியன் மகன் தனுஷின் தசை சிதைவு நோய் காரணமாக அவரால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. இதனால் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார் நெப்போலியன். தனுஷ் திருமணத்திற்காக இந்தியா வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் தனுஷிற்கு ஜப்பான் செல்ல வேண்டும் என்பது கனவு. அவரால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது என்பதால் எந்த இடத்திற்கு செல்வது என்பது குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் தனுஷ் தனது திருமணத்தை ஜப்பானில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

மகன் திருமணம்.. தாலி கட்டியதும் ஆனந்த கண்ணீர் விட்ட நெப்போலியன்!

நெப்போலியன் மகன் திருமணம்

Published: 

07 Nov 2024 17:27 PM

நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிற்கு இன்று திருமணம் நடைப்பெற்ற நிலையில் அந்த தருணத்தில் நெப்போலியன் ஆனந்த கண்ணீர் விட்டது தற்போது வைரலாகி வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் அமெரிக்காவில் உள்ள நெப்போலியனின் குடும்பம் தொடர்பான வீடியோ வெளியானது. அந்த நேரத்தில் நெப்போலியன் தனது மகன்களுக்காக செய்த பல விஷயங்களை மக்கள் பாராட்டினர். சிறந்த அப்பா நெப்போலியன் என்றும் அந்த வீடியோவிற்கு பிறகு பாராட்டப்பட்டார் நெப்போலியன். இந்த நிலையில் நெப்போலியனின் மூத்த மகனின் திருமணம் இன்று ஜப்பானின் நடைப்பெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சினிமா பிரபலங்கள் பலர் ஜப்பான் சென்றுள்ளனர். அதில் நடிகர்கள் சரத்குமார், ராதிகா, குஷ்பு ,மீனா, டான்ஸ் மாஸ்டர் கலா, கார்த்தி என திரையுலகப் பிரபலங்கள் பலர் ஜப்பான் சென்றிருக்கின்றனர்.

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டடுள்ளார். அண்மையில் இவருக்கு திருமண நிச்சையம் நடைப்பெற்றது. வீடியோ கால் மூலமாக திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த அக்ஷயாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடதக்கது.

தொடர்ந்து நெப்போலியன் மற்றும் அவர்களது குடும்பம் தொடர்பான செய்திகளும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. நெப்போலியன் மகன் தனுஷின் தசை சிதைவு நோய் காரணமாக அவரால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. இதனால் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார் நெப்போலியன்.

தனுஷ் திருமணத்திற்காக இந்தியா வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் தனுஷிற்கு ஜப்பான் செல்ல வேண்டும் என்பது கனவு. அவரால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது என்பதால் எந்த இடத்திற்கு செல்வது என்பது குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் தனுஷ் தனது திருமணத்தை ஜப்பானில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

தனது மகனின் விருப்பத்தை நிறைவேற்ற குடும்பத்துடன் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே நெப்போலியன் ஜப்பான் சென்றார். அங்கு திருமணத்திற்கான வேலைகள் தீவிரமாக நடந்தது. இதனை தொடர்ந்து திருமணத்தில் ஹல்தி, சங்கீத், மெஹந்தி போன்ற நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தது.

Also read… Cinema Rewind: கமல் சாரின் பக்தன் நான்… நடிகர் மாதவன் சொன்ன விஷயம்

இந்த நிகழ்ச்சிகள் தொடர்ப்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் இன்று தனுஷின் திருமண நிகழ்வின் போது நடிகர் நெப்போலியன் கண்ணீர் விட்டு கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணசித்திர நடிகர் என அனைத்து கதாப்பாத்திரத்திலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நெப்போலியன். இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார் நெப்போலியன். சினிமா மட்டும் இன்றி அரசியலிலும் தனது பங்கை சிறப்பாக ஆற்றியுள்ளார் நெப்போலியன். தனது குடும்பத்திற்காக அரசியலை விட்டுவிட்டு அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார் நெப்போலியன். நெப்போலியனுக்கு, குணால் மற்றும் தனுஷ் என 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

கருப்பு நிற புடவையில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்
புடவையில் கலக்கும் ஜான்வியின் போட்டோஸ்
நடைபயிற்சிக்கு பிறகு இந்த தவறை பண்ணாதீங்க
ஓட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?